பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

இயற்கை எழில் கொஞ்சுகின்ற


ஜெயசித்ரா நடித்த இப்பாடலின் காணொலி இதுவரை சிக்காமல் இருந்தது.
P சுசீலா அம்மா வழக்கம் போல தூள் பரத்தியிருக்கும் மற்றுமொரு பாடல். இசை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் என நினைத்தேன். ஆனால் V குமார் என்பது எனக்கு ஆச்சரியம்தான். அருமையான பாடல்.

திரைப் படம்: தேன் சிந்துதே வானம் (1975)
குரல்: P சுசீலா
இசை: V குமார்
நடிப்பு : ஜெயசித்ரா, சிவகுமார்
இயக்கம்: R A சங்கரன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMjQxNjk2N19JVzM0SV9lZjJh/iyarkai%20ezhil%20konsuginra%20nila%20madanthai.mp3லா ல ல ல லா ல ல லா ல ல ல லா ல ல 
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
இந்த நீரோடை
அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 

பச்சை புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்

இந்தப் பாவைக்கு சூட்டி வைத்த மணி மகுடம்
பச்சை புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்

இந்தப் பாவைக்கு சூட்டி வைத்த மணி மகுடம்
கொச்சை மொழி பேசுகின்ற பறவையினம்

இவள் கொலுவிருக்கும் மண்டபத்தில் புலவரினம்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
லா ல ல ல லா ல ல லா ல ல ல லா ல ல 

மலை மேல் தவழ்ந்த மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால் எல்லார்க்கும்
தீரும் தாகங்களே
மலை மேல் தவழ்ந்த மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால் எல்லார்க்கும்
தீரும் தாகங்களே
நீங்களும் நானும் ஒன்று 
என் நினைவுகள் பறப்பது உண்டு
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 

அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
நான் ஒரு சுதந்திரப் பறவை
அந்த ஆண்டவன் எழுதிய கவிதை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
இந்த நீரோடை
அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
லா ல ல ல லா ல ல


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல்... நன்றி சார்...

கருத்துரையிடுக