பின்பற்றுபவர்கள்

திங்கள், 28 அக்டோபர், 2013

மங்கை ஒரு திங்கள்

வெளிவராத இந்தத் திரைப் பட பாடல் அபூர்வமானப் பாடல். மிகச் சொற்பமான இசைக் கருவிகளைக் கொண்டு S P B அவர்களுக்கு முழு சுதந்திரத்துடன் பாட செய்தது போல தோன்றுகிறது. இது போல எத்தனை பாடல்கள்  வந்தாலும் அ லுக்காமல் கேட்கலாம்.

திரைப் படம்: முன் ஒரு காலத்திலே (1980 வாக்கில்)
பாடல்: வாலி???
இசை:  M S விஸ்வனாதன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzUxMzE0Nl9QSEhsUF9iODc5/MangaiOruThingal.mp3மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்

துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்
துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்
பாவை முகக்கலைகள்
தமிழ் கோவில் கொண்ட சிலைகள்
வங்கக்கடல் அலைகள்
பனி வழங்கும் வண்ண மலைகள்
பொங்கும் நதி நிலைகள்
அந்தப் பூவை நகை வலைகள்
மங்கை ஒரு திங்கள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
போதை மொழி பணங்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
போதை மொழி பணங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்
போதை மொழி பணங்கள்
அந்தப் புறாக்கள் அவள் இனங்கள்

ஆசை மிகும் குணங்கள்
அவள் ஜாடை பல விதங்கள்
கனிகள் தந்த இதழ்கள்
உயர் கவிகள் தந்த வரிகள்
கிளிகள் தந்த மொழிகள்
என்னை கிள்ளும் அவள் தடைகள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்

தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
காட்டும் அவள் அசைகள்
அவள் கால கோயில் மணிகள்
தெய்வம் வைத்த கடைகள்
அவள் தேகம் சொல்லும் விலைகள்
நெஞ்சில் இல்லை தடைகள்
அவள் கண்ணில் ரெண்டு கதைகள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்
மங்கை ஒரு திங்கள்

2 கருத்துகள்:

myspb சொன்னது…

இனிமையான பாடல் தங்களின் கருத்துக்களை இதில் இணைத்துள்ளேன்.
http://myspb.blogspot.in/2008/11/703.html
நன்றி சார்.

Raashid Ahamed சொன்னது…

எப்போதோ கேட்ட பாடல். எஸ்பி பாலாவின் பழைய குரல் எத்தனை அழகு.

கருத்துரையிடுக