பின்பற்றுபவர்கள்

வியாழன், 24 அக்டோபர், 2013

சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

சில பல இசை வடிவங்களும் சிலரின் குரல் வளமும் சில நோய்களை தீர்க்கும் என்பார்கள். ஆனால் இது போன்ற பல  பாடல்கள் நிச்சயமாக சில மனக் கவலைகளை மறக்கச் செய்வது உண்மை. அனுபவித்தால்தான் தெரியும்.
நடமாடும் குழந்தை பெயர் பேபி கஞ்சனா என்கிறார்கள்.

திரைப் படம்: வீர பாண்டிய கட்டபொம்மன் (1959)
நடிப்பு: சிவாஜி, வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி
இயக்கம்: B R பந்துலு
இசை: G ராமனாதன்
பாடல்: கு மா பாலசுப்ரமணியம்
பாடியவர்: S வரலக்ஷ்மி

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzE2NTQ0NF9odUM4Z181ZTM5/SINGARA%20KANNE%20UN.mp3

சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறாத இன்பங்கள் சேர்ப்பாயடி

சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி
துள்ளி ஆடாதே வா சின்ன ராணி

பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே
நீ சீராட வாராய் செந்தேனே
இந்த பாராளும் மாமன்னர் மார் மீதிலே
நீ சீராட வாராய் செந்தேனே
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

செவ்வல்லி கை வண்ணம் காட்டி
செவ்வல்லி கை வண்ணம் காட்டி
எங்கள் சிந்தை எல்லாம் இன்பம் மூட்டி
நீ ஆடாதே கண்ணே
யாரேனும் உன்னை கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்த பூங்காவிலே
நீ பண்பாட வாராய் செந்தேனே
அன்பென்னும் ஆனந்த பூங்காவிலே
நீ பண்பாட வாராய் செந்தேனே

சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்த்தாயடி 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல் அல்லவா...? நன்றி...

seetharaman. j சொன்னது…

அருமையான பாடல், நினைவுகள், மிகவும் நன்றி

கருத்துரையிடுக