பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 22 அக்டோபர், 2013

பேசியது நானில்லை கண்கள்தானே நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே


ஈடில்லா  பாடல். வேறொருத்தர் பாடியிருந்தால் இந்த அளவு இனிமை இருந்திருக்குமா என்பது சந்தேகமே.
ஆனாலும் பாடலாசிரியர் பாடலின் ஆரம்பத்தில், தொட்டு விட்டார், ஒட்டி கொண்டார், காதல் நினைவெல்லாம் அவர் மீதே.... என்று எழுத ஆரம்பித்து பாடலின் பின் பாதியில் வட்ட நிலவு எனக்கு புது வானம் அவன்..., இன்பம் அவன்... என முடிப்பதுதான் கொஞ்சம் முரணாக இருக்கிறது.
எப்படியும் பாடல் சுகம்தான்.


திரைப் படம்: செங்கமலத்  தீவு (1962)
குரல் : M S ராஜேஸ்வரி
இசை: K V மகாதேவன்
பாடல்:ஏகலைவன்
இயக்கம்: ராஜேந்திரன்
நடிப்பு: ஆனந்தன், ராஜ்யஸ்ரீ




பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

தொட்டு விட்டார் என்னுடலில் தென்றல் பாய்ந்தது

ஒட்டி கொண்டார் என் மனதில் காதல் பிறந்தது

தொட்டு விட்டார் என்னுடலில் தென்றல் பாய்ந்தது

ஒட்டி கொண்டார் என் மனதில் காதல் பிறந்தது

அணை போட்டு பார்த்தேன் நிற்கவில்லை

அணை போட்டு பார்த்தேன் நிற்கவில்லை

காதல் நினைவெல்லாம் அவர் மீதே

உறக்கமில்லை உறக்கமில்லை

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

வாவென்று எவரும் அழைக்கவில்லை

எதையும் தாவென்று நானும் கேட்கவில்லை

வாவென்று எவரும் அழைக்கவில்லை

எதையும் தாவென்று நானும் கேட்கவில்லை

தானொன்று செய்தார் தீமை இல்லை

தானொன்று செய்தார் தீமை இல்லை

தோன்றி மறைந்து விட்டார்

மின்னலைப் போல்

காணவில்லை காணவில்லை

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

எட்ட நின்றேன் பார்வை தனில் உள்ளம் கலந்தது

கிட்ட சென்றேன் எனை தாவி நாணம் அணைத்தது

வட்ட நிலவு எனக்கு புது வானம் அவன்

வட்ட நிலவு எனக்கு புது வானம் அவன்

காலம் கூட்டி வந்த என் வாழ்வின்

இன்பம் அவன் இன்பம் அவன்

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

பேசியது நானில்லை கண்கள்தானே

நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இசைக்கேற்ற வரிகள் மாற்றப்பட்டு விட்டதோ தெரியவில்லை... நன்றி...

கருத்துரையிடுக