பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்

இது ஒரு அபூர்வமான பாடல் என நினைக்கிறேன். இனிமையான பாடல். பாடல் காட்சி கிடைக்கவில்லை. வழக்கமாக சங்கர் கணேஷ் இசையில் இது போன்ற பாடல்கள் கிளப் டான்ஸ் பாடலாகத்தான் அமையும். இடையில் உச்சரிக்கப் படும் ஆங்கில வசனங்கள் அப்படித்தான் தோன்றுகிறது.

திரைப்படம்: அன்பு ரோஜா (1975)
இயக்கம்:தேவராஜ் மோகன்
நடிப்பு: முத்துராமன், லதா
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்கள்:எஸ் பி பி, P சுசீலா
பாடல்:தெரியவில்லை


http://asoktamil.opendrive.com/files/Nl8yNzY5MjMwMV9nMTMzbV9mY2M0/paal%20nilavu%20neram-anbu_roja.mp3பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா

பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா

ததும்பிடும் மதுக்குடம்
தனையெடுத்தொரு தரம்
பருகிட வருகையில் மறைப்பதென்ன
உதடுகள் எழுதிடும்
புதுப்புது கதைகளை
முதல் முதல் படித்திட மறுப்பதென்ன
படுக்கையறை பாடல்கள்
பழக என்ன ஊடல்கள்
எதற்கு இந்த நாணங்கள்
விருந்தை விடுவேனோ
விலகுவது ஏனோ

HO you can't escape
kiss me
Don't miss me darling

ம் ம் ம் ம் ம்

உடையிலும் நடையிலும்
உருவத்தை மறைத்தொரு
நவரச நாடகம் நடித்ததென்ன
இடை கொண்ட கனிகளை
இடம் கண்டு பறித்திட
இளமனம் இதுவரை துடித்ததென்ன

நடந்த வரை விளையாட்டு
தெரிந்த பின்பு பாராட்டு
மடியில் என்னைத் தாலாட்டு
மயங்கி விட வேண்டும்
மணிவிழிகள் நான்கும்

Ho don't say me
you are a naughty boy

பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்

பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமே
தீரும் வரை நாமே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கிளப் டான்ஸ் பாடல் என்று வரிகளில் தெரிகிறது...!

கருத்துரையிடுக