பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

நேர்மறையான (Negative) அர்த்தம் கொண்ட பாடல் வரிகள் நமது தமிழ் படங்களுக்கு அப்போது புதிது. இந்தப் பாடலும், இது குழந்தை பாடும் தாலாட்டு எனும் பாடலும் அப்படிப்பட்டவைதான். ஆகையால் பட்டென்று பற்றிக் கொண்டது.
இவ்வளவு திறமை உள்ளவர் ஏன் சமீப காலங்களில் எழுதிய பாடல்களும் இசையும் தேறவில்லை என்பது புதிரான விஷயம்.
இந்தப் படத்திற்கு AA ராஜ் என்னும் இசையமைப்பாளர்  உதவியாக இருந்தார். கொஞ்ச நாளில் அவர் மறைந்த பின்பு அப்படியே சில படங்களில் ஒப்பேத்திவிட்டார். பின்னர் இசையமைத்த, பாடல் எழுதிய படங்கள் அவருக்கு வெற்றியை தரவில்லை.

திரைப்படம் :ஒரு தலை ராகம். (1980)
இசை, பாடல், இயக்கம் : விஜய் டி ராஜேந்தர்
பாடியவர் : எஸ் பி பி
நடிப்பு: சங்கர், ருபா


http://asoktamil.opendrive.com/files/Nl8yMzY5MzY2MF8yMmxsMF8wYTI3/VaasamillaaMalaridhu-OruThaalaiRagam.mp3


வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எங்கள் கல்லூரி நாட்களில் அதிகம் பிரபலமான பாடல்... இந்தப் படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்...

கருத்துரையிடுக