பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி

பாடல் காட்சி கிடைக்கவில்லை. படத்தில் இடம் பெறவில்லையா தெரியவில்லை. வழக்கம் போல கிடைக்கும் போது இணைத்துவிடுவேன். எஸ் பி பியின் வழக்கமான இனிய ஆரம்ப கால குரல். அவருடன் இனிமையாக இணைந்துள்ளது சுசீலா அம்மாவின் குரல்.


திரைப் படம்: யாருக்கு யார் காவல் (1979)
பாடியவர்கள்: S சுசீலா,  S P பாலசுப்ரமணியம்
இயக்கம்: கே ஜே ஜோய்
பாடல்: தெரியவில்லை.
இசை: ரமேஷ் நாயுடு (V குமார் என நினைத்திருந்தேன்)
நடிப்பு: ஸ்ரீகாந்த், ஸ்ரீப்ரியா

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTIzMzg3M19EWEZ5N183MTk0/Sippiyin%20ullae%20muthaadum.mp3ம் ம் ம் ம்
ல ல ல ல

சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி
மடியல்லவோ பொன்னூஞ்சல்
உன் மகனாய் நான் வரவோ
சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி

உன்னோடு தான் நான் சொல்ல
நாணம் பிறந்ததைய்யா
சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் உன்னிடமே
மறைப்பாளோ தேவி

மன்மதன் கதை எழுத
மடல் என நானிருக்க
உண்டாகும் காவியங்கள்
ஹா
ஒன்றல்ல ஆயிரங்கள்

ரகசிய நாடகத்தில்
ரதி மதன் நடிக்கையிலே
திரை விட நேரமில்லை
ஹா
தொடர்ந்தது காதற் கலை

அம்மாடி நீ அணைக்கையிலே
உன் கைகளிலே

சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி

லலலலா
லலலலா
ஹா ஹா
லலலலா

சுகங்களின் ஸ்வரங்களிலே
சுருதி லயம் சேர்ந்திருக்க
சங்கம தாகங்களோ
ஹா
சந்தித்த மோகங்களோ

நீ ஒரு பல்லவியோ
இவள் மனம் உன் சரணம்
என்னென்ன தாளங்களோ
ஹா
எல்லாமே பாவங்களோ

சங்கீதமே விளங்குதம்மா
உன் வடிவினிலே

சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி

சொல்லாமல் உன்னிடமே
மறைப்பாளோ தேவி

மடியல்லவோ பொன்னூஞ்ஜல்
உன் மகனாய் நான் வரவோ

ம் ம் ம் ம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா 

1 கருத்து:

aravind karthik சொன்னது…

இசைதான் கே.ஜே.ஜாய் என்று நினைக்கிறேன்

கருத்துரையிடுக