பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

புஷ்பராகம் சக்ரவாகம் ரத்னஹாரம் திவ்யரூபம்

\

என்னவென்று தெரியவில்லை, கொஞ்ச நாட்களாக காதொலியும் கண்ணொளியும் (Audio and Video players) இணைப்புகளாக வருவதில்லை. அதை சரி பார்க்கவும் நேரமில்லை. இன்று சென்னை பயணம் இருப்பதால் அங்கே போய் சரி பார்க்க முயற்சிக்கிறேன். முடியவில்லை என்றால் Wordpressக்கு  மாறிவிட வேண்டியதுதான்.

தனிக்குடித்தனம் நாடகமாக வந்ததாக ஞாபகம். பின்பு படமாக்கப்பட்டது. மெரினா அவர்களின் நாடகம் என நினைக்கிறேன். இனிமையான இரு குரலிசை. அபூர்வமான பாடல்.  இந்தப் பாடலில் நடித்த நடிகை யாரென்று தெரியவில்லை.


திரைப் படம்: தனிக் குடித்தனம் (1977)
நடிப்பு:சோ, Y G மகேந்திரன், K R விஜயா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: S A கண்ணன்
பாடியவர்கள்: எஸ் பி பி, L R ஈஸ்வரி
பாடல்:தெரியவில்லை

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTYwNDg5OV9LcTJvdV9mOTY2/pushparaagam%20chakkrapaagam-thanikudithanam.mp3

<iframe src="https://www.opendrive.com/listen/Nl8zMTYwNDg5OV9LcTJvdQ" height="25" width="297" style="border:0" scrolling="no" frameborder="0" allowtransparency="true"></iframe>

புஷ்பராகம் சக்ரவாகம்
ரத்னஹாரம் திவ்யரூபம்
சந்த்ரலோகம் சப்த கீதம்
புஷ்பராகம் சக்ரவாகம்
ரத்னஹாரம் திவ்யரூபம்
சந்த்ரலோகம் சப்த கீதம்

இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம்
நீராடும் கோலங்கள்
இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம்
நீராடும் கோலங்கள்

காமரூபன் பத்மனாபன்
தேவதேவன் ராஜராஜன்
காளிதாசன் இன்ப நேசன்
காமரூபன் பத்மனாபன்
தேவதேவன் ராஜராஜன்
காளிதாசன் இன்ப நேசன்

இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்

நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கை கூட படவில்லை தாவணியில்
நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கை கூட படவில்லை தாவணியில்
கட்டுப்பாடு சுகம் தட்டுப்பாடோ
நாம் ஒட்டிக் கொள்ள அம்மம்மாடி
இந்தப் பாடோ
புஷ்பராகம் சக்ரவாகம்
ரத்னஹாரம் திவ்யரூபம்
சந்த்ரலோகம் சப்த கீதம்

இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம்
நீராடும் கோலங்கள்

உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
பத்துப் பாடல் இதழ் முத்துப் போலே
நான் சொல்ல சொல்ல
இன்னும் வரும் இன்ப நாளே

காமரூபன் பத்மனாபன்
தேவதேவன் ராஜராஜன்
காளிதாசன் இன்ப நேசன்

இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்

புஷ்பராகம் சக்ரவாகம்
ரத்னஹாரம் திவ்யரூபம்
சந்த்ரலோகம் சப்த கீதம்

1 கருத்து:

asoktamil சொன்னது…

நன்றி தனபாலன் சார். எதற்கு வம்பென்று அனைத்து கூகுல் + இணைப்பிகளையும் நீக்கிவிட்டேன். இதனால்தான் பிரச்னை என்பது எனக்கு தெரியவில்லை. மீண்டும் நன்றி. தொடர்ந்து தொடருங்கள்.

கருத்துரையிடுக