பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன்

மு க. முத்துவின் இன்னுமொரு இனிய பாடல்.

திரைப் படம்: இங்கேயும் மனிதர்கள் (1975)
நடிப்பு: மு க முத்து, வெண்ணிற ஆடை நிர்மலா
இசை: T S நடேஷ் (யாரிது)
பாடல்: தெரியவில்லை
இயக்கம்: A L நாராயணன்
பாடியவர்கள்: மு க  முத்து, S ஜானகி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNDYxMDUwOF8xRDg2VF8xYjky/Mottu%20Virinthathu[128].mp3





மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இங்கு ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன்
தேனை அள்ளிக் சுவைத்தேன்
ஆசைக் கொண்ட உள்ளம் தன் ஆவல் தன்னைச் சொல்லும்
என் மன மாளிகை உன் வசமானது எடுத்தேன்
நான் என்னைக் கொடுத்தேன்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

ஹோ ஹோ ஹோ ஹோ
ல ல ல ல ல

அழகோவியம் ஒன்று நடமாடுது
அது அலையாடும் நதியோரம் கதை பேசுது
அழகோவியம் ஒன்று நடமாடுது
அது அலையாடும் நதியோரம் கதை பேசுது

இள நெஞ்சில் அரங்கேறும் புது நாடகம்
இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
இள நெஞ்சில் அரங்கேறும் புது நாடகம்
இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

மின்னல் இடை ஆட
இன்பம் தன்னை தேட
மின்னல் இடை ஆட
இன்பம் தன்னை தேட

என்னாளும் சுகம் காணும் நமதுள்ளமே

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

செவ்வானமே சிந்தும் மழையாகுமே
உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே
செவ்வானமே சிந்தும் மழையாகுமே
உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே

மது ஊறும் இதழோரம் நீ தேடி வா
இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா
மது ஊறும் இதழோரம் நீ தேடி வா
இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா

எண்ணம் ஒன்று சேரும்
கண்ணும் கண்ணும் மோதும்
எண்ணம் ஒன்று சேரும்
கண்ணும் கண்ணும் மோதும்
என்னாளும் சுகம் காணும் நமதுள்ளமே

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இங்கு ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன்
தேனை அள்ளிக் சுவைத்தேன்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்


புதன், 18 செப்டம்பர், 2013

காற்று வந்தால் தலை சாயும்...நாணல்...

காத்திருந்த கண்கள் திரைப் படத்தின் அனைத்து பாடல்களுமே அருமையான பாடல்கள். அனைத்துமே அப்போது நல்ல வெற்றிப் பெற்ற பாடல்கள்.
ஆனால் என்ன... இப்போது போல அப்படி முழுமையாக ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் பாராட்டப் பட்டால் அந்தப் படத்தை இன்னிசை மழை, புயல் என்று சொல்லிக் கொள்ளவில்லை.
சொல்லிக் கொள்ளத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.
பாடல்கள் வெற்றிப் பெற்றே அந்தப் புகழை படத்திற்க்கும், இசைக்கும்,  தயாரிப்பாளருக்கும் பெருமைகளை வாங்கித் தந்தது.

நாணல்...நானம் என்று சுசீலா அம்மாவின் குரலில் வார்த்தைகள் தேனாய் வழிகின்றன.
அபூர்வமான பாடல் இல்லையென்றாலும் அருமையான இந்தப் பாடலை கேட்டு மகிழ்வோம்.

திரைப் படம் : காத்திருந்த கண்கள் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா



http://asoktamil.opendrive.com/files/Nl8xMDQxMDg4NF96ZDdxVl9jYzBj/Kaatru%20Vanthal%20thalai.mp3





காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்
ஆற்றினிலே கரை புரளும்
வெள்ளம்
ஆசையிலே கரை புரளும்
உள்ளம்

ஆடைத் தொட்டு விளையாடும்
தென்றல்
ஆசைத் தொட்டு விளையாடும்
கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான்
வேதம்
இருவராக படிக்கச் சொல்லும்
காதல்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்

மழை வரும் முன் வானை மூடும்
மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்
மோகம்
மழை வரும் முன் வானை மூடும்
மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்
மோகம்
ஓடி வரும் நாடி வரும்
உறவு கொண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்
மானும்
பாடி வரும் பருவ முகம்
பக்கம் வந்து நின்றவுடன்
பாசதோடு சேர்ந்துக் கொள்வேன்
நானும்
நானும்
நாமும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

அஞ்சி அஞ்சி நடந்து வரும்
அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும்
கண்ணம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும்
அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும்
கண்ணம்
கொஞ்சி வரும் வஞ்சி முகம்
கோபுரத்துக் கலசமென
அந்தி வெயில் நேரத்திலே
மின்னும்
மின்னி வரும் நேரத்திலே
மேனி கொண்ட பருவத்திலே
முன்னிருந்தால் தோற்றுவிடும்
பொன்னும்
உள்ளம்
துள்ளும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

திங்கள், 16 செப்டம்பர், 2013

இரு விழியின் வழியே நீயா வந்து போனது

இளையராஜாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
வித்தியாசமான கவிதை வரிகள். வழக்கமான பாடல் வரிகளையும் சொற்களையும் தவிர்த்திருக்கிறார் கவிஞர்.
மனம் குளிர ஒரு பாடல்.


திரைப் படம்: சிவா (1989)
பாடியவர்கள்: S P B, K S சித்ரா
இசை: இளையராஜா
இயக்கம் : அமீர்ஜான் (தயாரிப்பு: K பாலசந்தர் )
பாடல்: புலமைபித்தன்
நடிப்பு: ரஜினி,  ஷோபனா






ல ல ல ல ல ல லாலாலலா
ல ல ல ல ல ல லாலாலலா

இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது

விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

தொட்டிலிடும் இரு தேம்மாங்கனி
என் தோளிலாட வேண்டுமே

கட்டிலிடும் உன் காமன் கிளி
மலர் மாலை சூட வேண்டுமே

கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கிறேன்

கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்

கார் கால மேகம் வரும்

கல்யாண ராகம் வரும்

பாடட்டும் நாதஸ்வரம்

பார்க்கட்டும் நாளும் சுகம்

விடிகாலையும் இளமாலையும்

இடை வேளையின்றி இன்ப தரிசனம்

விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது

விழியின் வழியே நீயா வந்து போனது

இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

உன் மேனியும் நிலக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்

ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்

எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்

இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்

தென்பாண்டி முத்துக்களா

நீ சிந்தும் முத்தங்களா

நோகாமல் கொஞ்சம் கொடு

உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம்

விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது

ல ல ல ல ல ல லாலாலலா
ல ல ல ல ல ல லாலாலலா

சனி, 14 செப்டம்பர், 2013

எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்

ஆராதனா 1969இல் வெளிவந்த ஹிந்தி திரைப் படம். இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து சூப்பர் ஹிட் ஆனது.  அதுவே  சிவகாமியின் செல்வன் என்ற பெயரில் தமிழில் வந்து சிவாஜி கணேசனின் இஷடத்திற்கு கதை வளைக்கப்பட்டு பப்படம் ஆனது. 

யாதோங்கி பாராத் என்ற இந்தி படமும் எம் ஜி யாரின் கைங்கரியத்தால் தமிழில் நாளை நமதேவாக பெட்டியில் முடங்கியது. 
ஹாத்தி மேரே சாத்தி என்ற உலக சூப்பர் ஹிட் படம் நல்ல நேரமாக எம் ஜி யார், விஜயா எனும் இரண்டு இளம் நடிகர்கள் நடித்து, தமிழில் எடுக்கப்பட்டு ஊத்தி மூடப் பட்டது.

நல்ல வேளையாக தமிழில் யாரும் ஷோலே என்ற ஹிந்தி படத்தை முயற்சிக்கவில்லை என நினைக்கிறேன். ஜெமினி, முத்துராமன் போன்றவர்களை நடிக்க வைத்து  நம்ம ஆட்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருப்பார்கள்.போகட்டும்,

ஆராதனா படத்தில் மிகப் பிரபலமான இந்தப் மேட்டில் வந்தப் பாடலை  K V மகாதேவன் சற்றும் சுவை குறையாமல், நமது இசைக் குயில்களின் வாயிலாக வழங்கியிருக்கிறார்.

இங்கே ஒரிஜினல் ஹிந்தி பாடலையும் இணைத்திருக்கிறேன். 

திரைப் படம்: அருணோதயம் (1971)
குரல்கள்:  S P B, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி
இயக்கம்:தெரியவில்லை 

ஹிந்தியில்.....



தமிழில்......






எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
திருவிழா 
திருவிழா
இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
திருவிழா 
திருவிழா

சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது
அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல
பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ

எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
திருவிழா 
திருவிழா

போகச் சொன்னது கால் போகும்போது
கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது
பேசச் சொன்னது வாய் பேசும்போது
நாணம் வந்து மூடச் சொன்னது
தழுவச் சொன்னது கை தழுவும்போது
என்ன வந்து நழுவச் சொன்னது
தழுவச் சொன்னது கை தழுவும்போது
என்ன வந்து நழுவச் சொன்னது
தயக்கம் வந்தது பெண்ணின்
பழக்கம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ

இன்று நாளை எந்த நாளும் 
இன்பத் தேவன் திருவிழா
திருவிழா
திருவிழா

அன்ன வாகனம் போல ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதனம்
தர்ம தரிசனம் அதை தலைவன் மட்டும்
பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்
கன்னி மோகனம் என்னை கட்டிக் கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னி மோகனம் என்னை கட்டிக் கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
என்ன காரணம் நெஞ்சின்
எண்ணம் காரணம்
ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ

எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
திருவிழா 
திருவிழா
இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
திருவிழா 
திருவிழா

ஆஹ ஹ ஹ ஓஹோ ஓஹோ  ம் ம் ம் 

வியாழன், 12 செப்டம்பர், 2013

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்



இந்தப் பாடலை ஞாபகப் படுத்திய நண்பர், பதிவர் திரு ஜனா அவர்களுக்கு நன்றி.
வாழ்க்கையின் பாடம் கூட காதலின் பாடமும் இணைந்து அற்புதமாக கவி பாடியுள்ளார்கள்.
என்ன ஒரு இனிமையானப் பாடல்? கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
 
திரைப் படம்: இவன் அவனேதான் (1960)
இசை: எம். ரங்கராவ் ( G ராமநாதன் இல்லியோ?)
பாடல்: வில்லிப்புத்தூரான் 
பாடுபவர்கள்: S ஜானகி, திருச்சி லோகநாதன். 
இயக்கம்: T G ராஜ் 
நடிப்பு: உதய குமார், பண்டரிபாய்


 
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
மாசிலா காதல் பேசுதே சேர்ந்து
மாமலை தேடும் வான் வெகு தூரம்
நாமதைக் காண ஏது ஆதாரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
புதுமையைப் பார் இது காதல் அத்தாட்சி
கிளைக் கனத்தாலே நீரலை மேலே
வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே
ம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
காதலின் தாபம் தணித்திட வேண்டி
கரைதனை தாவி வரும் அலை பாராய்
தென் திசைக் காற்றின் வேகத்தினாலே
திரை நதி மோதும் அது கரை மேலே
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
பொன் வண்டு பூவை தாவியே ஓடி
புதுக் காதல் கீதம் பாடுதே நாடி
தேனுண்ணும் வண்டு தான் பசி கொண்டு
பூ மலர் கண்டு கத்துது மண்டு
ஹுஹூம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
 
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்