பின்பற்றுபவர்கள்

வியாழன், 12 செப்டம்பர், 2013

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்இந்தப் பாடலை ஞாபகப் படுத்திய நண்பர், பதிவர் திரு ஜனா அவர்களுக்கு நன்றி.
வாழ்க்கையின் பாடம் கூட காதலின் பாடமும் இணைந்து அற்புதமாக கவி பாடியுள்ளார்கள்.
என்ன ஒரு இனிமையானப் பாடல்? கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
 
திரைப் படம்: இவன் அவனேதான் (1960)
இசை: எம். ரங்கராவ் ( G ராமநாதன் இல்லியோ?)
பாடல்: வில்லிப்புத்தூரான் 
பாடுபவர்கள்: S ஜானகி, திருச்சி லோகநாதன். 
இயக்கம்: T G ராஜ் 
நடிப்பு: உதய குமார், பண்டரிபாய்


 
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
மாசிலா காதல் பேசுதே சேர்ந்து
மாமலை தேடும் வான் வெகு தூரம்
நாமதைக் காண ஏது ஆதாரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
புதுமையைப் பார் இது காதல் அத்தாட்சி
கிளைக் கனத்தாலே நீரலை மேலே
வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே
ம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
காதலின் தாபம் தணித்திட வேண்டி
கரைதனை தாவி வரும் அலை பாராய்
தென் திசைக் காற்றின் வேகத்தினாலே
திரை நதி மோதும் அது கரை மேலே
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
 
பொன் வண்டு பூவை தாவியே ஓடி
புதுக் காதல் கீதம் பாடுதே நாடி
தேனுண்ணும் வண்டு தான் பசி கொண்டு
பூ மலர் கண்டு கத்துது மண்டு
ஹுஹூம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
 
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்


 

2 கருத்துகள்:

கே. பி. ஜனா... சொன்னது…

மிக இனிமையான பாடல்... மகிழ்ச்சி!

Raashid Ahamed சொன்னது…

இந்த பாடலை திருச்சி லோகநாதனுடன் பாடியது s.ஜானகி அவர்கள் என்றால் எத்தனை பேரால் நம்பமுடியும். இந்த குரலில் தான் எத்தனை அழகு. அதுமட்டுமா ? டிஆர் மகாலிங்கம், ஏஎம் ராஜா, நடிப்பிசைப்புலவர் கேஆர் ராமசாமி, சிஎஸ் ஜெயராமன் டிஎம்எஸ் போன்ற தலைசிறந்த பாடல்களுடன் பாடியதோடு இக்கால பாடகர்களான எஸ்பிபி, மலேசியா, ஜேசுதாஸ், மனோ போன்றவர்களுடன் பாடிய அற்புத ஓப்பிடமுடியா பாடகி தான் ஜானகி அம்மா அவர்கள்.

கருத்துரையிடுக