பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன்

இனிமையான பாடல். S P Bயின் ஆரம்ப காலப் பாடல். இன்று வரை அவரின் இனிமை மாறா குரல் வண்ணம். திருமதி சுசீலா அம்மாவுடன் இணைந்து தேனில் நனைந்த பலாவாக இனிக்கிறது.

நல்ல நடிகையான விஜயலலிதா பின்னர் காபரே நடிகை ஆக்கப் பட்டது நமது துரதிர்ஷ்டமே.


திரைப் படம்: மாப்பிள்ளை அழைப்பு (1972)
இயக்குனர்: T R ரகுநாத்
நடிப்பு: ஜெய்ஷங்கர், விஜயலலிதா
இசை:  V குமார் என்கிறது விக்கிப்பீடியா
பாடல்: வாலி
குரல்கள் : S P B, P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl85OTMxNTg2X1ZoVnNZX2QxNjQ/Ullathil%20Nooru%20ninaithen-%20Mappillai%20Azhaippu.mp3


உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னை தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டுத் தழுவ

கையோடு என்னை அள்ளி
கன்னா உன் கண்ணிரெண்டும்
ஆராரோ படாதோ நான் துயில

அஞ்சி வரும் தென்றலுக்கு மயங்கி

முந்தி வரும் ஆசையிலே நெருங்கி

போக போக அத்தனையும் விளங்கி

நடக்கட்டும் கதை இன்று தொடங்கி

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்று
கண்ணோட்டம் சென்றதென்ன
என்னை தேடி

பூந்தோட்டம் தன்னைக் கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்தேன் இங்கு
உனைத் தேடி

புத்தகம் போல் பூவை உன்னை புரட்ட

பள்ளியறை பாடங்களை புகட்ட

முக்கனியும் சர்க்கரையும் திகட்ட

முப்பொழுதும் இந்த சுகம் இனிக்க

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னை தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்தப் பாடலைக் கேட்டதே இல்லை... நன்றி...

Raashid Ahamed சொன்னது…

மிகச்சிறுவனாக இருந்த போது கேட்ட பாடல் மலரும் நினைவுகளை தூண்டியதற்கு நன்றி கேட்க பரவசமாக உள்ளது.

கருத்துரையிடுக