பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

நல்ல தமிழ் விளக்கே

நல்ல இனிமையான அமைதியானப் பாடல். பாடியவர்கள் இருவரும் நன்கு ரசித்து பாடி பாடலுக்கு மேலும்  இனிமை சேர்த்திருக்கிறார்கள்.

திரைப் படம்: எல்லோரும் வாழ வேண்டும் (1962)
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி, பாலாஜி, மாலினி
குரல்கள்: A M ராஜா, ஜிக்கி
இயக்கம்: B V ஆச்சார்யா
இசை: K V மகாதேவன்


http://asoktamil.opendrive.com/files/Nl8yMTA2OTI2OF8zMFVocF80Y2Ex/Nalla%20thamil%20vilakke.mp3


வான் முகத்தில் வைர நிலா இருக்குதென்று
தேன் மலர்கள் சிரிப்பதைப் பார் இன்பம் கொண்டு
நான் விரும்பும் நங்கையவள் வந்துவிட்டாள்
வான் நிலவும் தேன் மலரும் வணக்கம் சொல்லும்
ஹா ஹா
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே
சொல்லித் தெரியனுமா
காதல் சொல்லித் தெரியனுமா
நான் சொல்லித் தெரியனுமா
காதல் கண்ணால் என்மேல்
வெண்பா பாடும்
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே

கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
வண்ணக்கிளி உனக்கு
அத்தான் வண்ணக்கிளி உனக்கு
வண்ணக்கிளி உனக்கு
பேசும் கண்ணால் என் மேல்
வெண்பா பாடு
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு

இனிப்பான நேரம்
பனிச் சோலையோரம்
எனை நாடி வரும் இன்பக்
கலைக் கோவில் நீ
எழுதாமல் உருவான
சிலையாகும் நீ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கலைக் கோவில் நெஞ்சின்
கவிப் பாடி கொஞ்சும்
அழகே என் பேரின்ப
கலை வாசல் நீ
அறம் கூறும் பொருள் இன்ப
வழிகாட்டி நீ

ஹா
ம்

ஆஹா கற்கண்டு
அபிமானம் கொண்டு
அன்பால் என் மேல்
வெண்பா பாடும்
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே

வன ராணி சோலை
நகைப் பூவைக் கண்டேன்
பனிவான புகழ் மாலை
தனை சூடுதே
புனல் மேகம்
மலையோடு சிலையாகுதே

ஹா ஹா ஆ ஆ
கூவாத சோலை
பூவே நீ வா வா
புது வாழ்வின்
முதல் பாடல் நாம் பாடுவோம்
புது வாழ்வின்
அலங்காரப் பண்பாடுவோம்
ஹா ஹா ஆனந்தம்
இதுவே பேரின்பம்
அன்பே இனி ஒன்றாய்
வாழ்வோம்
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
ஹா ஹா ஆனந்தம்
இதுவே பேரின்பம்
அன்பே இனி ஒன்றாய்
வாழ்வோம்
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
ஹா ஹா ஆ ஆ ஆ
ஹா ஹா ஆ ஆ ஆ
ஹா ஹா ஆ ஆ ஆ


2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

இதுவரை கேட்டிராத இப்பாடலை தங்கள் தயவால் இன்று கேட்டு ரசித்தேன். இனிய பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

TSK சொன்னது…

திரைப் படம்:- எல்லோரும் வாழ வேண்டும்;
ரிலீஸ்:- 14th ஏப்ரல் 1962;
இசை:- ராஜன் - நாகேந்திரன்;
பாடல் வரிகள்:- வில்லிபுத்தன்;
குரல்கள்:- A. M. ராஜா, ஜிக்கி;
நடிப்பு:- பாலாஜி, மாலினி;
Production Company:- S. R. S. Pictures;
இயக்கம்:- G. விஸ்வநாதன்.

கருத்துரையிடுக