பின்பற்றுபவர்கள்

சனி, 14 செப்டம்பர், 2013

எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்

ஆராதனா 1969இல் வெளிவந்த ஹிந்தி திரைப் படம். இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து சூப்பர் ஹிட் ஆனது.  அதுவே  சிவகாமியின் செல்வன் என்ற பெயரில் தமிழில் வந்து சிவாஜி கணேசனின் இஷடத்திற்கு கதை வளைக்கப்பட்டு பப்படம் ஆனது. 

யாதோங்கி பாராத் என்ற இந்தி படமும் எம் ஜி யாரின் கைங்கரியத்தால் தமிழில் நாளை நமதேவாக பெட்டியில் முடங்கியது. 
ஹாத்தி மேரே சாத்தி என்ற உலக சூப்பர் ஹிட் படம் நல்ல நேரமாக எம் ஜி யார், விஜயா எனும் இரண்டு இளம் நடிகர்கள் நடித்து, தமிழில் எடுக்கப்பட்டு ஊத்தி மூடப் பட்டது.

நல்ல வேளையாக தமிழில் யாரும் ஷோலே என்ற ஹிந்தி படத்தை முயற்சிக்கவில்லை என நினைக்கிறேன். ஜெமினி, முத்துராமன் போன்றவர்களை நடிக்க வைத்து  நம்ம ஆட்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருப்பார்கள்.போகட்டும்,

ஆராதனா படத்தில் மிகப் பிரபலமான இந்தப் மேட்டில் வந்தப் பாடலை  K V மகாதேவன் சற்றும் சுவை குறையாமல், நமது இசைக் குயில்களின் வாயிலாக வழங்கியிருக்கிறார்.

இங்கே ஒரிஜினல் ஹிந்தி பாடலையும் இணைத்திருக்கிறேன். 

திரைப் படம்: அருணோதயம் (1971)
குரல்கள்:  S P B, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி
இயக்கம்:தெரியவில்லை 

ஹிந்தியில்.....



தமிழில்......






எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
திருவிழா 
திருவிழா
இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
திருவிழா 
திருவிழா

சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது
அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல
பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ

எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
திருவிழா 
திருவிழா

போகச் சொன்னது கால் போகும்போது
கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது
பேசச் சொன்னது வாய் பேசும்போது
நாணம் வந்து மூடச் சொன்னது
தழுவச் சொன்னது கை தழுவும்போது
என்ன வந்து நழுவச் சொன்னது
தழுவச் சொன்னது கை தழுவும்போது
என்ன வந்து நழுவச் சொன்னது
தயக்கம் வந்தது பெண்ணின்
பழக்கம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ

இன்று நாளை எந்த நாளும் 
இன்பத் தேவன் திருவிழா
திருவிழா
திருவிழா

அன்ன வாகனம் போல ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதனம்
தர்ம தரிசனம் அதை தலைவன் மட்டும்
பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்
கன்னி மோகனம் என்னை கட்டிக் கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னி மோகனம் என்னை கட்டிக் கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
என்ன காரணம் நெஞ்சின்
எண்ணம் காரணம்
ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ

எங்கள் வீட்டுத் தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
திருவிழா 
திருவிழா
இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
திருவிழா 
திருவிழா

ஆஹ ஹ ஹ ஓஹோ ஓஹோ  ம் ம் ம் 

3 கருத்துகள்:

arulmozhi சொன்னது…

நல்ல நேரம் தேவரின் மிகப்பெரிய வெற்றிப்படம்.நாளை நமதே படமும் வெற்றிப்படமே.தவறான தகவல் தர வேண்டாம்.

NAGARAJAN சொன்னது…

சிவகாமியின் செல்வன் படமும் வெற்றிப் படமே. ஆராதனா படத்திலிருந்து சிறிதும் மாற்றம் இல்லாமல்தான் படம் எடுக்கப்பட்டது.

ஆராதனா பாடல்களின் சாயல் சிறிதும் இல்லாமல், MSV அருமையான பாடல்களைத் தந்த படம்.

பெயரில்லா சொன்னது…

SRI.KISHORE VOICE VERY CUTE GURUJI VOICEKKU MUN IVAR VOICE ENNAI KALANGADITHTHAU ENPATBU UNMAI. NANDRI.

கருத்துரையிடுக