பின்பற்றுபவர்கள்

திங்கள், 2 செப்டம்பர், 2013

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா

இனிமையானப் பாடல். டி  எம் எஸ், ஜமுனா ராணியுடன் மிக மென்மையாக பாடியிருக்கிறார். அபூர்வமான பாடல்.

திரைப் படம்: எதையும் தாங்கும் இதயம் தவறு தங்க ரத்தினம்
இசை: T R பாப்பா
பாடியவர்: டி  எம் எஸ், ஜமுனா ராணி
எழுதியவர்: ஆத்ம நாதன்?? தெரியவில்லை!

http://asoktamil.opendrive.com/files/Nl8xOTk2MjcxNF9Pa1BqbV9mMWU3/Jalamellam%20theriethu%20aaha.mp3

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

பொய்க் கோபம் கொள்ளுவதும்
ம்
போவென்று தள்ளுவதும்
ஹும்
கைக்கார ஆண்கள் செய்யும்
மெய்க் காதல் சாகசமே

தேடும் போது ஓடுவதும்
ஹும்
ஓடும் போது தேடுவதும்
வாடிக்கையாய் பெண்கள்
நெஞ்சில் வளர்ந்திருக்கும் சாகசமே
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

கன்னத்தைக் கிள்ளுவதும்
கண்ணாலே கொல்லுவதும்
கன்னியரை மயக்க ஆண்கள்
கைக் கொள்ளும் சாகசமே

கரும்பாக பேசுவதும்
காதல் வலை வீசுவதும்
எறும்பாக ஆணை பெண்கள்
இழுக்கச் செய்யும் சாகசமே
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம் ம் ம்

குறும்பான பார்வையிலே
கொஞ்சி வரும் பார்வையிலே
அரும்பான காதல் மலர்ந்து
அன்பு மணம் வீசிடுமே
குறும்பான பார்வையிலே
கொஞ்சி வரும் பார்வையிலே
அரும்பான காதல் மலர்ந்து
அன்பு மணம் வீசிடுமே

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஜாலமெல்லாம் தெரியுது ஆகா...

அருமை...

நன்றி...

NAGARAJAN சொன்னது…

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பாடலைக் கேட்கிறேன். மிகவும் நன்றி.
இப்பாடலின் M P 3 வடிவினை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன் ஸார், சமீப காலமாக நமது இணையத்தில் அப்லோட் செய்யப்பட்ட பாடல்கள் டௌன்லோட் செய்யப்படுவதில்லை. ஆகையால் அந்த வசதியை நீக்கிவிட்டேன். நீங்கள் விரும்பிக் கேட்பதால் இங்கே மீண்டும் அப்லோட் செய்திருக்கிறேன்.

கே. பி. ஜனா... சொன்னது…

சார்,( I think, )இந்தப் பாடல் 'தங்க ரெத்தினம்' படத்தில் எஸ்.எஸ்,ராஜேந்திரன், விஜயகுமாரி நடித்த பாடல் காட்சி, இசை திரு கே,வி. மகாதேவன்...

Unknown சொன்னது…

ஜனா சார், மிகப் பழைய பாடல்களுக்கு இந்தக் குழப்பங்கள் இணையில் நிறைய இருக்கின்றன. நீங்கள் சொன்னதும் சரியாக இருக்கலாம். நான் எழுதி இருப்பது தவறாக இருக்கலாம்.நானும் இணையில் யாரையாவது நம்பித்தான் பாடல்களைப் பற்றி விளக்கம் எழுதுகிறேன். ஆகையால் தவறுகளை பொருட்படுத்த வேண்டாம்.பாடல்களை ரசிப்போம் என்பது எனது தாழ்மையான கருத்து.
நன்றி சார்.

கருத்துரையிடுக