பின்பற்றுபவர்கள்

வியாழன், 26 செப்டம்பர், 2013

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

இந்த பாடலின் ராகம் யமுனா கல்யாணி என்கிறார்கள் வித்வான்கள். இன்றைக்கும் ஒரு சினிமா பாடலாக இல்லாமல் பக்தி ரசம் குறையாத, மக்கள் மனதில் முணுமுணுக்க வைக்கும் ஒரு பாடல். ஒரு முறை கேட்டுவிட்டால் நீண்ட நாள் மனதை விட்டு அகலாத பாடல்.
மிகப் பெரிய வெற்றிக் கண்ட படமாம். MKTயின் நடிப்பும் பாடல்களும் இந்த படத்தில் அவ்வளவு பிரசித்தம் என்பார்கள். நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் இந்த படத்தில் ஓரிரு காட்சியில் தோன்றுகிறார்.
63 நாயனார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் அவர்களின் வாழ்க்கையை பற்றிய படம்.

திரைப் படம்: திருநீலகண்டர்  (1939)
இசை: காருக்குறிச்சி  மோகனரங்கம் (சரிதானா?)
நடிப்பு: M K தியாகராஜ பாகவதர், திருநெல்வேலி பாப்பா லக்ஷ்மி காந்தம், NSK, T A மதுரம், T S துரைராஜ்.
இயக்கம்: ராஜா சாண்டோ ஜம்புலிங்கம் (சரியா)

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTQzMDM1NF9zbFpsc19hMTI4/Deenakaruna%20mp3.mp3

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி அருளும்
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி அருளும்
மௌன குருவே கரனே எனையாண்ட நீலகண்டனே
மௌன குருவே கரனே எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே


 மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே
கரனே எனை ஆண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

ஆதி அந்தமில்லா கரனே
ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ யே யே யே யே
ஆதி அந்தமில்லா கரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
ஆதி அந்தமில்லா கரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பரவசமூட்டும் சிறப்பான பாடல்...

NAGARAJAN சொன்னது…

இசை அமைத்தவர் பாபநாசம் சிவன். இப்பாடலை எழுதியவரும் இவரே.

http://www.hindu.com/cp/2009/09/04/stories/2009090450391600.htm

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதான எண்ணிப் பாருங்க என்ற பாடல் (படம் : மதுரை வீரன் - எம் ஜி ஆர் ) இதே மேட்டில் வரும். இசை அமைத்தவர் G ராமநாதன்

Unknown சொன்னது…

மிகவும் நன்றி நாகராஜன் சார்.

Raashid Ahamed சொன்னது…

நான் சொல்ல நினைத்ததை நாகராஜன் சார் சொல்லிவிட்டார். கொஞ்சமும் மாறாமல் ஒரே மெட்டில் ராகத்தில் உள்ள பாடல்கள் இவை. ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜபாகவதர் தான் முதல் தமிழ் சூப்பர் ஸ்டார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவர் நடித்த ஹரிதாஸ் படம் 3 ஆண்டுகள் ஓடிய சரித்திர சாதனையை இதுவரை யாரும் முறியடிக்க வில்லை முடியவும் முடியாது. அப்போது உள்ள மக்கள் தொகையோடு ஓப்பிட்டா இப்போது 12 வருஷம் ஓடினால் தான் அதை முறியடித்ததற்கு சமம்.

கருத்துரையிடுக