பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை


M B ஸ்ரீனிவாசன் தமிழ் திரை உலகினுக்கு வழங்கிய எல்லா பாடல்களுமே இனிமையானது, சுகமானது. அந்த வரிசையில் மோகனக் குரல்கள் பாடும் இந்தப் பாடல்.

திரைப் படம்: எடுப்பார் கைப் பிள்ளை (1975)
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், சுபா
இசை: M B ஸ்ரீனிவாசன்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMDY5NTk5MV9iMml0UV9lMWQ0/ponnum%20mayngum%20-eduppar%20kai%20pillai.mp3


பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்

பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்

என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும்
அன்பு விளக்கு

உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும்
சொந்தம் எனக்கு

என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும்
அன்பு விளக்கு

உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும்
சொந்தம் எனக்கு

ஒரு புது மாளிகை
அதில் ஒரு மேனகை
தேவனைத் தேடுகின்றாள்

அதிசய மேனகை
இடையினில் மேகலை
ஆடிட வாடுகின்றாள்

ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

சங்கொலி முழங்கிடும்
மங்களத் திரு நாள்
சந்திக்க ஓடி வந்தேன்

சங்கொலி முழங்கிடும்
மங்களத் திரு நாள்
சந்திக்க ஓடி வந்தேன்

சாமத்து பூஜையின்
ஆரம்ப தினத்தை
சிந்தித்து தேடி வந்தேன்

சிந்தித்து தேடி வந்தேன்

பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை
தனில் தெய்வம் விளங்கும்

பால் நிலவில்
இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட

பால் நிலவில்
இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட

பகலோ

ம் ம் ம்

இரவோ

ஹோ ஹோ ஹோ

பகலோ
இரவோ
எதுவோ
அறியோம் பஞ்சணை உறவாட
பஞ்சணை உறவாட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக