பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 7 ஜனவரி, 2014

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்

தெலுங்கிலிருந்து இறக்குமதியான படமும் இசையும்.என்று நினைக்கிறேன். பாடலின் ஆரம்பத்தில் எஸ் பி பியின் குரல் போலவே தெரியவில்லை. அழகானபாடல்.


திரைப்படம்: கிழக்கே ஒரு காதல் பாட்டு (1992)
பாடியவர்கள்: எஸ் பி பி, K சித்ரா
நடிப்பு: ஆனந்த், ரஞ்சிதா.
இசை: வித்யாசாகர்

http://asoktamil.opendrive.com/files/Nl8yODcyNzM1MF9OcXlSUF9jMWRk/Raagam%20thaalam%20iruvarin%20thegam.mp3



ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

பெண்மகள் தங்க மேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்

பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்

இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

ல ல ல ல ல ல லாலா 
ல லாலா லலல லல 
ந ந ந ந ந ந ந 

எத்தனை இரவு கனவு வந்தது
இன்று கண்டது பொய் இல்லை

பந்தி வைக்கவே ஆசை உள்ளது
பரம்பரை நாணம் விடவில்லை

கட்டிலில் மெத்தையில் இன்பமென்ற சொந்தம்
சேவல்கள் கூவியும் விலகிடாத பந்தம்

மரம் மீது பறவை ஆவோமா

சிறகோடு வானம் போவோமா

நீல வானில் பாடல் பாடி நிலவை தேடி போவோம்

கோடை காலம் போன பின்பு மீண்டும் மண்ணில் சேர்வோம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

காதல் என்னுமோர் புதிய பள்ளியில் உந்தன் மாணவி ஆனேனே

காமன் என்பவன் நமது பள்ளியில் பாடம் கேட்கிறான் பெண் மானே

நீரிலே நீர்த்துளி சங்கமிக்கும் வேளை
ஆயிரம் பூ விடும் பெண்மை என்ற சாலை

நான் என்ற வார்த்தை முடியட்டுமே

நாம் என்ற வார்த்தை தொடங்கட்டுமே

மாரிகாலம் போன பின்பு பூமி எங்கும் பூக்கள்

எந்தன் வாழ்வில் காண வேண்டும் ஈரமான நாட்கள்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

பெண்மகள் தங்க மேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்

பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ஆ ஆ ஆ

ராகம் தாளம் 

இருவரின் தேகம் ஆகும்

இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்


சனி, 4 ஜனவரி, 2014

உன் விழி சொல்லும் சிறு கதை ஒன்று

மீண்டும் திருமதி வாணி ஜெயராமின் பாடல். இது ஜெயச்சந்திரனுடன்.
கணீர் என விழும் வார்த்தைகள். சுருதி பிறழாத பாடல்.இனிமை.

திரைப் படம்: எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் (1983)

இசை: சங்கர் கணேஷ்  

பாடியவர்கள்: P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் 





உன் விழி சொல்லும் 
சிறு கதை ஒன்று 
இன்று தொடராக 
மலர்கின்றதோ 
சுகம் என்ன 
அதன் சுவை என்ன 
நாளை விடிந்தாலே 
தெரியும் கண்ணே 

உன் விழி சொல்லும் 
சிறு கதை ஒன்று 
இன்று அரங்கேற  
துடிக்கின்றதோ 
சுகம் என்ன 
அதன் வடிவென்ன 
நாளை விடிந்தாலே 
தெரியும் கண்ணா 

உடல் செவ்வாழை 
முகம் ரோஜா பூ 
பனி மலரிதழ்கள் 
நான் கெஞ்ச 
நீ கொஞ்ச மனம் அஞ்சும் 
உடல் செவ்வாழை 
முகம் ரோஜா பூ பனி மலரிதழ்கள் 
நான் கெஞ்ச 
நீ கொஞ்ச மனம் அஞ்சும் 

கவிஞர்கள் சொன்னாரம்மா  
காதல் கவிதை 
கன்னி மனம் நினைக்குதைய்யா
 நாளை நடப்பதை 

உன் விழி சொல்லும்
ஆ ஆ ஆ ஆ
சிறு கதை ஒன்று
ஹ்ம்ம்ம்
இன்று தொடராக மலர்கின்றதோ
சுகம் என்ன 
அதன் வடிவென்ன 
நாளை விடிந்தாலே 
தெரியும் கண்ணா 

ஒரு தனி அரையில் 
இந்த முதல் இரவில் 
துணை அருகிருக்க 
பயமேது தடையேதும் கிடையாது 
ஒரு தனி அரையில் இந்த 

இந்த முதல் இரவில் 

துணை அருகிருக்க 
பயமேது தடையேதும் கிடையாது 

நடக்கட்டும் எல்லாமிங்கே நன்மையாகவே 
கிடைக்கட்டும் ஒன்றாகவே இன்பம் யாவுமே 


உன் விழி சொல்லும் 

சிறு கதை ஒன்று 
இன்று அரங்கேற  

துடிக்கின்றதோ 
சுகம் என்ன 

அதன் சுவை என்ன நாளை விடிந்தாலே 

தெரியும் கண்ணே 


இந்த இரவோடு 

துள்ளும் அழகோடு 

அள்ளி விளையாட 
விதி சேர்க்கும் 

இந்த சொந்தம் விலகாதே 
இந்த இரவோடு 
துள்ளும் அழகோடு 
அள்ளி விளையாட 
விதி சேர்க்கும் 
இந்த சொந்தம் விலகாதே 
கனவிலும் கண்ணே 
உன்னை நான் மறப்பேனோ 
நினைவுகள் நீங்காமலே 
நான் சிரிப்பேனோ 

உன் விழி சொல்லும் சிறு கதை ஒன்று 
இன்று தொடராக மலர்கின்றதோ 
சுகம் என்ன அதன் வடிவென்ன 
நாளை விடிந்தாலே  தெரியும் கண்ணா 
நாளை விடிந்தாலே தெரியும் கண்ணா

வியாழன், 2 ஜனவரி, 2014

ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம்

வாணி ஜெயராமின் கணீர் குரலும், கே ஜே யேசுதாஸின் மேன்மைக் குரலும் எம் எஸ்விஸ்வநாதன் இசையும்  ஒரு அமைதியான சூழ்நிலையை காண்பிக்கிறது. மென்மையான பாடல்.

திரைப் படம்: பயணம் (1976)
குரல்கள்: கே ஜே  யேஸுதாஸ், வாணி ஜேயராம்
இசை: எம் எஸ் விஸ்வனாதன்
இயக்கம்: தெரியவில்லை
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஜெயசித்ரா

http://asoktamil.opendrive.com/files/Nl8yODQ0MTI1N19uaXhtTl8zZWUx/Aaramba%20Kaalam%20oru%20pakka.mp3







ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 
     

ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 

ஆனப் பின்னலே இருப்பக்க மேளம் 
அதுதான் வாழ்க்கை அன்போடு 

ஆனப் பின்னலே இருப்பக்க மேளம் 
அதுதான் வாழ்க்கை அன்போடு 

தேவாமிருதம் தேனிதழ்கள் 
தேவர்கள் இல்லை நான் வந்தேன் 

மார்பின் அகலம் குன்றங்கள் 
மலர்கள் இல்லை நான் வந்தேன் 

தேவாமிருதம் தேனிதழ்கள் 
தேவர்கள் இல்லை நான் வந்தேன் 

மார்பின் அகலம் குன்றங்கள் 
மலர்கள் இல்லை நான் வந்தேன் 

மஞ்சள் மேனியில் தென்றல் பட்டு 
அஞ்சக்கண்டு நான் வந்தேன் 

மாலைகள் ஏந்து மங்கள சாந்து 
மார்பினில் நீந்து என்னைத் தந்தேன் 

ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 
     

நாடகமேடை திரை இல்லை 
நாயகி வந்தாள் கவி பாடி 

நாயகியுடனே துணை இல்லை 
நாயகன் வந்தான் துணை தேடி 

மின்னல் ரோஜா பொன்னில் ஊறி 
கையில் வந்தது உறவாடி 

கன்னன் ராதா, ராமன் சீதா 
வந்தார் இங்கே நம்மைத் தேடி 

ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 

ஆனப் பின்னலே இருப்பக்க மேளம் 
அதுதான் வாழ்க்கை அன்போடு


ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் 
அதுதான் காதல் பண்பாடு 


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 

செவ்வாய், 31 டிசம்பர், 2013

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

மீண்டும் A A ராஜ் அவர்களின் ஒரு பாடல். வாசுவின் குரல் கொஞ்சம் வறண்ட குரலாக தெரிகிறது இந்த பாடலில். ஆனாலும் ஆண்மைமிக்க குரல். இனிய பாடல்.
இந்த திரைப் படம் வெளியானதா இல்லையா என்பது தெரியவில்லை.

திரைப்படம்:  தணியாத தாகம் (1982)
நடிப்பு: டெல்லி கனேஷ்,
இசை: A A ராஜ்
இயக்கம் E M இப்ராஹிம்
குரல்: S ஜானகி, மலேஷியா வாசுதேவன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yODI2OTEyNF9XMXh2cV8yMDJm/Poove%20nee%20yaar%20solli.mp3










ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ

என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான்
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே

கோவில் கலசம் போல் என் தேவி

கூந்தலில் ஆடிடும் உன் மேனி

கோவில் கலசம் போல் என் தேவி
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே

மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
பூப்பொல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
என் கரம் பட்டு

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
புது மலர் புது மலர்
புது மலர் புது மலர்