பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

அமைதியான பின்னனி இசையுடன் ஒரு இனிமையான பாடல்.

திரைப்படம்: ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
இயக்கம்: யோகானந்த்
நடிப்பு: சிவாஜி, விஜயா
இசை: விஸ்வனாதன்
தயாரிப்பு: குற்றாலிங்கம்
பாடல் வரிகள்: முத்துலிங்கம்

http://www.divshare.com/download/13654455-2f5

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே தங்க நகை உனக்கெதற்க்கு..

தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..

அபிஷேக அலங்கார பாவை ஆசை அலைமோதும் புது மோக பார்வை..

தமிழ் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து..
தமிழ் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
மழையாலே நனையாத உள்ளம் உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும்..

இளங்காற்று தாலாட்டும் நேரம் புது இன்பம் கண்டு மஞ்சம் இளைப்பாரும்..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

வியாழன், 30 டிசம்பர், 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி தொப்பிதொப்பி, உங்களுக்கும் எனதருமை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

P சுசீலாவின் இனிமையான குரலில் ஒரு வாழ்க்கை தத்துவ பாடல். என்னை மிகவும் பாதித்த பல பாடல்களில் இதுவும் ஒன்று.

திரைப்படம்: மணிமண்டபம்
இசை:இயக்கம்:நடிப்பு: எந்த விபரமும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து விபரம் கூறுங்கள்.
இந்த திரைப் படம் வெளிவரவே இல்லை எனக் கேள்விப்பட்டேன்.

Download Music - Upload Audio - uravu varum oru naal-mani ma...

உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
வரவு வரும் வழியில் செலவு வரும்...
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

பகலும் வரும் உடனே இரவும் வரும்..
பகலும் வரும் உடனே இரவும் வரும்..
பழக வரும் துணையும் விலகிவிடும்..
பழக வரும் துணையும் விலகிவிடும்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

ஆசையிலே சில நாள் அவதியிலே சில நாள்..
ஆசையிலே சில நாள் அவதியிலே சில நாள்..
காதலிலே சில நாள் கவலையிலே சில நாள்...
காதலிலே சில நாள் கவலையிலே சில நாள்...
வாழ்வது ஓர் சில நாள் வாடுவதே பல நாள்..
வாழ்வது ஓர் சில நாள் மனம் வாடுவதே பல நாள்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

சென்றதெல்லாம் வருமோ அதை சிந்தனைதான் தருமோ..
வந்ததை யார் தடுப்பார் இனி வருவதை யார் மறுப்பார்...
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
இமைகளை மூடிடுவோம் துயர்களை ஓடிடுவோம்...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இமைகளை மூடிடுவோம் அதில் துயர்களை ஓடிடுவோம்...
மறுபடியும் விழிப்போம் மனிதரை போல் பிறப்போம்...
மறுபடியும் விழிப்போம் புது மனிதரை போல் பிறப்போம்...

உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
பழக வரும் துணையும் விலகிவிடும்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

புதன், 29 டிசம்பர், 2010

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...TMS

லக்ஷ்மி அவர்களின் முதல் படம், அழகான பாடல்கள். இதே பாடலை PS குரலில் கீழே தரமேற்றி இருக்கிறேன் கேட்டு மகிழுங்கள்.

திரைப்படம்: ஜீவனாம்சம் (1968)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: மல்லியம் ராஜகோபால்

பாடியவர்: TMS
நடிப்பு: சிவகுமார், ஜெய்ஷங்கர், லக்ஷ்மி

http://www.divshare.com/download/13639950-7a2

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம்...

என் கண்ணில் நிலைத்திருக்கும் என்றென்றும் உன் உருவம்..

தண்ணீரைக் குடித்தாலும் தனியாத தாகமன்றோ...

என் உயிரில் உன் உயிரும் இணைந்து விட்டால் தீருமன்றோ...

தனியறையின் கதவுகளை தாள் போட்டு அடைத்தாலும்...

மனமென்னும் தனியறையின் மனக் கதவு திறந்திருக்கும்...

என் உடலில் நீ பாதி உன் உடலில் நான் பாதி...

இன்ப துன்பம் இருவருக்கும் இறுதி வரை சரி பாதி...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...PS

லக்ஷ்மி அவர்களின் முதல் படம், அழகான பாடல்கள். இதே பாடலை TMS குரலில் அடுத்து தரமேற்றி இருக்கிறேன் கேட்டு மகிழுங்கள்.

திரைப்படம்:   ஜீவனாம்சம் (1968)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: மல்லியம் ராஜகோபால்
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: சிவகுமார், ஜெய்ஷங்கர், லக்ஷ்மி

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம்...

என் கண்ணில் நிலைத்திருக்கும் என்றென்றும் உன் உருவம்..

தண்ணீரைக் குடித்தாலும் தனியாத தாகமன்றோ...

என் உயிரில் உன் உயிரும் இணைந்து விட்டால் தீருமன்றோ...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

தனியறையின் கதவுகளை தாள் போட்டு அடைத்தாலும்...

மனமென்னும் தனியறையின் மணிக் கதவு திறந்திருக்கும்...