பின்பற்றுபவர்கள்

வியாழன், 30 டிசம்பர், 2010

உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

P சுசீலாவின் இனிமையான குரலில் ஒரு வாழ்க்கை தத்துவ பாடல். என்னை மிகவும் பாதித்த பல பாடல்களில் இதுவும் ஒன்று.

திரைப்படம்: மணிமண்டபம்
இசை:இயக்கம்:நடிப்பு: எந்த விபரமும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து விபரம் கூறுங்கள்.
இந்த திரைப் படம் வெளிவரவே இல்லை எனக் கேள்விப்பட்டேன்.Download Music - Upload Audio - uravu varum oru naal-mani ma...


உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
வரவு வரும் வழியில் செலவு வரும்...
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

பகலும் வரும் உடனே இரவும் வரும்..
பகலும் வரும் உடனே இரவும் வரும்..
பழக வரும் துணையும் விலகிவிடும்..
பழக வரும் துணையும் விலகிவிடும்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

ஆசையிலே சில நாள் அவதியிலே சில நாள்..
ஆசையிலே சில நாள் அவதியிலே சில நாள்..
காதலிலே சில நாள் கவலையிலே சில நாள்...
காதலிலே சில நாள் கவலையிலே சில நாள்...
வாழ்வது ஓர் சில நாள் வாடுவதே பல நாள்..
வாழ்வது ஓர் சில நாள் மனம் வாடுவதே பல நாள்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

சென்றதெல்லாம் வருமோ அதை சிந்தனைதான் தருமோ..
வந்ததை யார் தடுப்பார் இனி வருவதை யார் மறுப்பார்...
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
இமைகளை மூடிடுவோம் துயர்களை ஓடிடுவோம்...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இமைகளை மூடிடுவோம் அதில் துயர்களை ஓடிடுவோம்...
மறுபடியும் விழிப்போம் மனிதரை போல் பிறப்போம்...
மறுபடியும் விழிப்போம் புது மனிதரை போல் பிறப்போம்...

உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
பழக வரும் துணையும் விலகிவிடும்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

1 கருத்து:

THOPPITHOPPI சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக