பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

யாருக்கு யார் சொந்தம் என்பது...என்னை... நேருக்கு நேர் கேட்டால்

அழகான தமிழிலில் மற்றுமொரு பாடல்.


படம்:  சபாஷ் மாப்பிள்ளை   (1961)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: ஸ்ரீனிவாசன் ராகவன்
நடிப்பு: MGR , MR ராதா, மாலினி
குரல்கள்: சீர்காழி, P சுசீலா
பாடல்: மருத காசிhttp://www.divshare.com/download/13462001-0b6

யாருக்கு யார் சொந்தம் என்பது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...வாரி முடித்த குழல் எனக்கேதான் சொந்தமென்று...

வானத்துக் கார் முகிழும் சொல்லுதே...

வாரி முடித்த குழல் எனக்கேதான் சொந்தமென்று...

வானத்துக் கார் முகிழும் சொல்லுதே...

மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனம் என்று...

மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனம் என்று...

வண்ண மலர் எல்லாமே துள்ளுதே...

இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...வண்ண மலர் என்றும் வண்டுக்குத்தான் சொந்தம்...

வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓதந்தப் பல் எழில் கண்டு தன் இனம் தான் என்று...

பொங்கும் கடலின் முத்து பண் பாடுதே...

தந்தப் பல் எழில் கண்டு தன் இனம் தான் என்று...

பொங்கும் கடலின் முத்து பண் பாடுதே...

குங்கும இதழ் கண்டு...

கோவைக் கனி எல்லாம்

குங்கும இதழ் கண்டு...

கோவைக் கனி எல்லாம்

தங்களின் இனம் என்று ஆடுதே ஏ ஏ...

இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...கொத்தும் கிளிக்கேதான் கோவைக் கனி சொந்தம்...

குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது...

குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...யாருக்கு யார் சொந்தம் என்பது...என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

2 கருத்துகள்:

M.SANKAR சொன்னது…

வணக்கம்
பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே ஏன் ஏன் வரவில்லை நீ நீ தான் உயிரே-ஜெயசந்திரன் பாடிய பாடல்
படம் யாரோ அழைக்கிறார்கள் என நினைக்கிறேன் இந்த பாடலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ம.சங்கர் திருநெல்வேலி

Unknown சொன்னது…

திரு.ஷங்கர், உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும். நன்றி

கருத்துரையிடுக