பின்பற்றுபவர்கள்

புதன், 29 டிசம்பர், 2010

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...TMS

லக்ஷ்மி அவர்களின் முதல் படம், அழகான பாடல்கள். இதே பாடலை PS குரலில் கீழே தரமேற்றி இருக்கிறேன் கேட்டு மகிழுங்கள்.

திரைப்படம்: ஜீவனாம்சம் (1968)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: மல்லியம் ராஜகோபால்

பாடியவர்: TMS
நடிப்பு: சிவகுமார், ஜெய்ஷங்கர், லக்ஷ்மிhttp://www.divshare.com/download/13639950-7a2
எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம்...

உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம்...

என் கண்ணில் நிலைத்திருக்கும் என்றென்றும் உன் உருவம்..

தண்ணீரைக் குடித்தாலும் தனியாத தாகமன்றோ...

என் உயிரில் உன் உயிரும் இணைந்து விட்டால் தீருமன்றோ...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

தனியறையின் கதவுகளை தாள் போட்டு அடைத்தாலும்...

தனியறையின் கதவுகளை தாள் போட்டு அடைத்தாலும்...

மனமென்னும் தனியறையின் மனக் கதவு திறந்திருக்கும்...

என் உடலில் நீ பாதி உன் உடலில் நான் பாதி...

இன்ப துன்பம் இருவருக்கும் இறுதி வரை சரி பாதி...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக