பின்பற்றுபவர்கள்

புதன், 15 டிசம்பர், 2010

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது....

மீண்டும்  தூங்காத கண்னென்று ஒன்று படத்திலிருந்து இன்னுமொரு அழகான பாடல். திருமதி ஜானகி, SPB இருவரும் நன்கு உணர்ந்து பாடி இருக்கிறார்கள். பாடலுக்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள்  

படம்: தூங்காத கண்னென்று ஒன்று (1983)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: R. சுந்தர்ராஜன்

நடிப்பு; மோகன், அம்பிகா

பாடல்: முத்துலிங்கம்http://www.divshare.com/download/13518362-95dஇதய வாசல் திறந்த போது உறவு வந்தது....

உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது...

மலர் மீதிலே பனி சிந்துதே...

மனம் என்னும் தேனாற்றில் அலை மோதுதே...
இங்கு...இதய வாசல்
ஹோ
திறந்த போது
ஹோ
உறவு வந்தது....
மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே...

எனையும் கொடுத்தேன் மனதை இணைத்தேன் சிறகை விரித்தேன் பொன் வானிலே...

மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே...

எனையும் கொடுத்தேன் மனதை இணைத்தேன் சிறகை விரித்தேன் பொன் வானிலே...

வானத்து வில்லாலே பாலம்...

மேகம் சொர்கத்தை நாம் காண போடும்...

வானத்து வில்லாலே பாலம்...

மேகம் சொர்கத்தை நாம் காண போடும்...

நிலவென்னும் பெண் தோழி விண்மீனை பூவாக்கி...

வழி மீது தெளிப்பாளோ அங்கே அங்கே....

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது....

உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்து...

விழிகள் பொழியும் கவிதை மழையில் மனதில் மலரும் சங்கீதமே...

இளமை கரையில் இவளின் மடியில் கதைகள் தினமும் உருவாகுமே...

விழிகள் பொழியும் கவிதை மழையில் மனதில் மலரும் சங்கீதமே...

இளமை கரையில் இவளின் மடியில் கதைகள் தினமும் உருவாகுமே...

எழிலான உன் கூந்தல் ஓரம்...

நெஞ்சம் இளைப்பாறும் திரு நாளும் தோன்றும்...

எழிலான உன் கூந்தல் ஓரம்...

நெஞ்சம் இளைப்பாறும் திரு நாளும் தோன்றும்...

முப்பாலில் மூன்றாம் பால் இப்போது நீதானே...

எப்போது படித்தாலும் இன்பம் இன்பம்...

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது....

உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்து...

மலர் மீதிலே பனி சிந்துதே...

மனம் என்னும் தேனாற்றில் அலை மோதுதே...
இங்கு...இதய வாசல் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக