பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 டிசம்பர், 2010

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்

 ஒரு ஜோடி காதலில் மூழ்கியும், மற்றொரு ஜோடி போதையில் மூழ்கியும் ஒரு பெண் கணவன் கைவிட்ட சோகத்திலேயும் பாடியதாக அமைந்த பாடல் இனிமையாக இருக்கிறது


படம்:  பவானி  (1967)
பாடியவர்கள்: TMS, P சுசீலா, P B ஸ்ரீனிவாஸ். L R  E
இயக்கம்: T R ராமண்ணா
நடிப்பு: ஜெய்ஷங்கர், அசோகன், விஜயலக்ஷ்மி, விஜயகுமாரி
இசை: M S விஸ்வனாதன்


http://www.divshare.com/download/13588741-76f


இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...உந்தன் நெஞ்சினில் கொடுத்துவிடும்....

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...உந்தன் நெஞ்சினில் கொடுத்துவிடும்....இரவே வருக... உறவே வருக....தூய மஞ்சத்தில் பாவை நெஞ்சத்தில் நானிருக்கப் பார்த்திருக்கும் காதல் வெண்ணிலா...நான்கு கண்ணங்கள் பேசிக் கொள்ளட்டும்... நாளை மிச்சம் மீதியின்றி வாங்கிக் கொள்ளட்டும்...காலையில் வெட்கம் மாலையில் பக்கம் நாளை இன்னும் வேண்டும் என்று தேடிடும் உள்ளம்...குங்கும பொட்டு நெஞ்சினில் பட்டு கோடி இன்பம் ஓடி வந்த பாவனை சொல்லும்.....

இரவே வருக... உறவே வருக....

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...உந்தன் நெஞ்சினில் கொடுத்துவிடும்....ஓ ஓ ஓ ஓ ஹா ஹா ஹா ஹா

கண்ணாடி கிண்ணங்களில் மது ரசம் எடுத்து பெண்ணென்று பேர் சொல்லி என் கையில் கொடுத்து கண்ணாலே பருக சொன்னாள்...அதில் வண்டாக அமரச் சொன்னாள்...ஒரு மாலை மலர் தொடுத்து அதில் நீயும் குடியிருக்க...அழைத்தால் வருவேன் ...அணைத்தால் நான் தருவேன்...கல்யாணப் பெண்ணென்னும் பேர் ஒன்று கொடுத்து...கண்ணாடிக் கிண்ணங்களில் மது ரசம் எடுத்து கண்ணாலே பருகிவிடு...அதில் வண்டாக அமர்ந்து விடு...அது நாளை நடக்கட்டுமே....இந்த நேரம் இனிக்கட்டுமே...இதுதான் ஒரு நாள்...நினைத்தால் சுகம் தரும் நாள்....

இந்த நிலவை நாம் பார்த்தால் அது நமக்கென வந்தது போலிருக்கும்...ஒரு நினைவை எடுத்து வரும்...வரும் நெஞ்சினில் கொடுத்துவிடும்....இரவே வருக... உறவே வருக....ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை உறங்காத கண்கள் இங்கே....

ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை உறங்காத கண்கள் இங்கே....

நாளெல்லாம் தனிமை இங்கே நான் தேடும் வாழ்க்கை எங்கே ...நான் தேடும் வாழ்க்கை எங்கே ...

மலர்களிலே வாசம் இல்லை... மஞ்சளிலே அழகும் இல்லை...தலைவனிடம் காதல் இல்லை...இறைவனிடம் கருணை இல்லை...

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...அந்த நெஞ்சினில் கொடுத்துவிடும்....

இரவே மறைக... பொழுதே விடிக...

2 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

அருமையான பாடல். நன்றி.

பெயரில்லா சொன்னது…

திரு.அசோக் ராஜ் அவர்களே ,
மிக அரிதாக ஒலிபரப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
நான்கு பாடகர்கள் இணைந்து பாடிய பாடல்களில் ஒரே பாடலில் இரண்டு விதமாக மெட்டமைத்து தனது இசை திறனை மெல்லிசை மன்னர் காண்பித்தது சிறப்பானது.மெல்லிசை மன்னரை இசைஞானி வாயார புகழ்வது இதனால் தான் போலும்.
அருமையான opening. பாடல் அமைக்கப்பட்ட ராகம் திலங் என எண்ணுகிறேன். நாளாம் நாளாம் திருநாளாம் என்ற பாடலை நினைவு படுத்துகிறது.

மிக்க நன்றி.
தாஸ்

கருத்துரையிடுக