கணவன் மனைவியின் அன்னியோனியத்தை மிக அழகாக வர்ணிக்கும் பாடல். கவிஞர் திறமையாக இந்தப் பாடலில் இடம் பெறும் நடிகர்களின் பெயர்களையும் பாட்டில் இணைத்துள்ளார்.
திரைப் படம்: அவன் அவள் அது
நடிப்பு: சிவகுமார், லக்ஷ்மி
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
http://www.divshare.com/download/16728813-f89
http://www.divshare.com/download/16728848-25e
இல்லம் சங்கீதம்
அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம்
பிள்ளை சிங்கார ராகம்
இல்லம் சங்கீதம்
அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம்
பிள்ளை சிங்கார ராகம்
எல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள்
எல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள்
அந்த பெண்மை அன்று பேதை அல்லவோ
பேதை என்றாலும் மங்கை மேதை என்றாலும்
அந்த பெண்மை என்றும் உண்மை அல்லவோ
ஏதோ உண்மை சொன்னேன் கோபம் வந்ததோ
கொஞ்சம் மாற்றிச் சொன்னேன் சொல்ல கூடாதோ
இல்லம் சங்கீதம்
அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம்
பிள்ளை சிங்கார ராகம்
லக்ஷ்மி வந்தாளாம் வீட்டில் தீபம் வைத்தாளாம்
லக்ஷ்மி வந்தாளாம் வீட்டில் தீபம் வைத்தாளாம்
சின்ன பிள்ளை போல துள்ளி நின்றாளாம்
சிவனும் வந்தானாம் அங்கே குமரன் வந்தானாம்
எங்கள் இன்ப வாழ்வை காவல் கொண்டானாம்
கண்ணே பிள்ளை ஒன்று கையில் கொண்டுவா
கண்ணா கொள்ளை இன்பம் அள்ளிக் கொண்டுவா
பொன்னை தந்தாலும் கோடி பொருளை தந்தாலும்
இந்த காதல் தேவன் உள்ளம் போதுமே
என்னை தந்தேன் நான் என்றும் உன்னை தந்தாய் நீ
இந்த இன்பம் போதும் கால காலமே
நானும் ராமன் கண்ணில் சீதை அல்லவோ
வாழ்க்கை கீதை சொல்லும் பாதை அல்லவோ
இல்லம் சங்கீதம்
அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம்
பிள்ளை சிங்கார ராகம்
4 கருத்துகள்:
எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை
என் மனம் கவர்ந்த பதிவினைத் தரும் தங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
திரு ரமணி அவர்களுக்கு நன்றி ,
என் வாழ்நாளின் மிக உயரிய விருதாக இதை மதிக்கிறேன். என் பதிவுகள் அனைத்துக்கும் ஆதரவாக விளங்கும் அனைத்து நண்பர்களுக்குமே இந்த அன்பை சமர்ப்பிக்கிறேன். வாழ்த்துக்களுக்கு வணங்குகிறேன். நன்றி
அருமை அசத்தல் பாடல் பகிர்விற்க்கு நன்றி.
கேட்க பரவசத்தை ஏற்படுத்தும் பாடல். “ஏதோ உண்மை சொன்னேன் கோபம் வந்ததோ? கொஞ்சம் மாற்றி சொன்னேன் சொல்லக்கூடாதோ?” இவை எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
கருத்துரையிடுக