பின்பற்றுபவர்கள்

திங்கள், 26 மார்ச், 2012

முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா

இசையாலும் பாடும் குரல்களாலும் சிறப்பாகிய பாடல்.


திரைப் படம்: மனசுகேத்த மகராசன் (1989)
பாடியவர்கள்: S P B, K S சித்ரா
நடிப்பு: ராமராஜன், சீதா
இசை: தேவா
இயக்கம்: K தீனதயாளன்



முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இது ஒரு காதல் விழா
அடி பூவை சூடும் பூவே
இடம் கொடு

முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இது ஒரு காதல் விழா

ஒரு பூவை சூடும்
பூவின் இதழ் தொடு
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

காமன் கோவிலில் ஏற்றும் ஒளி தீபம் மணி விழிகள்
காதல் நோயினை மாற்றும் என் மன்னன் கனி மொழிகள்
மேனியில் பொன் வீணையின் சுக நாதம் கேட்குமோ
கூடலில் விளையாடலில் உனை ஆடை கேட்கவோ
இருவரின் இதயம் இணைகிற சமயம்
சுகமென்னும் மழை வரும்
இளமைகள் நனையும்
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

காலம் எத்தனை தூரம் தினம் நாமும் போய் வரலாம்
வாழ்வில் எத்தனை இன்பம் அதை நாளும் நாம் பெறலாம்
மார்பிலும் இரு தோளிலும் நான் மாலை ஆகிறேன்
மாலையும் இளங்காலையும் சுக ராகம் கேட்கிறேன்
அறுபது கலைகள் பழகிடும் நிலையில்
எதுவரை சுகம் வரும் அது வரை பயணம்

முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இது ஒரு காதல் விழா

ஒரு பூவை சூடும்
பூவின் இதழ் தொடு
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இனிமையான பாடல் பகிர்வு நன்றி.

கருத்துரையிடுக