பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மார்கழிப் பார்வை பார்க்கவா..தாமரை கைகள் சேர்க்கவா..

அழகான பாடல்.இனிமையான இசை, அதற்கேற்றக் குரல்கள் ஆனால் இது மோகன் நதியா நடித்த படம் இல்லை. அதற்கு முன்னதாக எடுக்கப் பட்டு வெளி வராமல் பெட்டியில் அடங்கி போன படம். இது ஸ்ரீ மாணிக்கம் ஃபிலிம்ஸ், கல்லக்குடி மாணிக்கம் தயாரிப்பில், எஸ் குமார் இயக்கத்தில் உருவானது.


திரைப் படம்: உயிரே உனக்காக (1986)
குரல்கள்: SPB, S ஜானகி.
பாடல்: வைரமுத்து
இசை: இளையராஜா
நடிப்பு: பிரபு, சுலக்க்ஷனா


ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
மார்கழிப் பார்வை பார்க்கவா..
தாமரை கைகள் சேர்க்கவா..
மார்கழிப் பார்வை பார்க்கவா..
தாமரை கைகள் சேர்க்கவா..
ஆசை ஆடை நான் தரவா..
தோகை நீயே மேகம் நானே..
ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மார்கழிப் பார்வை பார்க்கவா..
தாமரை கைகள் சேர்க்கவா..
நெஞ்சில் ஆசை கங்கை பொங்கும்..
மங்கையின் அங்கம் என்றே தங்கும்..

நீ தந்த ஆடை தீண்டும் அங்கம்..
நீ தொட்டதாக இன்பம் பொங்கும்..
உள்ளங்கையில் தேனிருக்க..

ஹா ஹா ஹா ..

என்ன சொல்லி காத்திருக்க..

இளமை சுடுமோ இதழோரம்..
பரிமாறும் வரை தாளாது..

தந்தானதனதானா..
தந்தானதனதானா..
தந்தானதனதானா..
தந்தானதனதானானா நா நா..
தந்தானன தனன தானானா..
தந்தானதனதானானா நா நா..
தந்தானன தனன தானானா..
தந்தானன தனன தானானா நா நா நா நா..

தேனில் சோலை மூழ்கும் வேளை..
தேகம் சூழும் முழுதும் போதை..

ஆதரவாக தோளில் சேர்த்து..
பூவிழி என்னும் வாசல் சாத்து..

கையிரண்டில் அள்ளியெடு..

வ வ வ வ..

காமனுக்கு சொல்லிவிடு..
நழுவும் பழமே ..
உயிரோடு உயிர் சேரும்..
சுகம் ஆரம்பம்..

மார்கழிப் பார்வை பார்க்கவா..
ம் ம் ம் ..
தாமரை கைகள் சேர்க்கவா..
ம் ம் ம் ..
ஆசை ஆடை நான் தரவா..
தோகை நீயே மேகம் நானே..
ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மார்கழிப் பார்வை பார்க்கவா..
தாமரை கைகள் சேர்க்கவா..1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

இந்த பாடலின் சில வரிகளை மட்டும் ஒரு தளத்தில் கேட்டு, முழு பாடலை பல தளங்களில் தேடினேன். கிடைக்கவில்லை. இப்போது இங்கே உங்கள் தளத்தில், நன்றி பகிர்வுக்கு.

கருத்துரையிடுக