பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

K J Y மற்றும் சித்ரா குரலில் இன்னுமொரு இனிமை பாடல்
திரைப் படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன் (1990)

இசை: இளையராஜா

இயக்கம்: N K விஸ்வனாத்

நடிப்பு: கார்த்திக், கனகா

பாடல்: பிறைச் சூடன்
http://www.divshare.com/download/14586339-ae3
ஆ ஆ.....ஆ ஆ....ஆ ஆ....ஆ ஆ...மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிறேன்..

தேயாமலே பிறை போலாகிறேன்..

தாங்காது இனி தாங்காது..

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..

பெண்ணே..

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..

பெண்ணே....

மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா..

தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா..

மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா...மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிறேன்..

தேயாமலே பிறை போலாகிறேன்..

தாங்காது இனி தாங்காது..

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..தனதன்ன தனதன்னா தானானா தனதனானதனன..என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..

என்னை..

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..

என்னை..

கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்

மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்

ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேரும் நீ....மல்லிகையே மல்லிகையே தூதாக போ

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிறேன்..

தேயாமலே பிறை போலாகிறேன்..

தாங்காது இனி தாங்காது..

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

1 கருத்து:

muthu சொன்னது…

அருமையான தூது பாடல் வரிகள்.

கருத்துரையிடுக