பின்பற்றுபவர்கள்

புதன், 28 நவம்பர், 2012

நிலவோ அவள் இருளோ ஒளியோ அதன்

T M சௌந்திரராஜன் நடித்த சில படங்களில் இது ஒன்று. ஆனால் பாடலை எழுதியவர் அருணகிரி நாதர் என்று போட்டிருக்கிறார்கள். 15ஆம் நூற்றாண்டில் இது போல தமிழ் இல்லை. மேலும் அருணகிரி நாதர் எழுதிய மற்றைய பாடல்களிலும் இது போன்று இன்றைய தமிழ் வழக்குச் சொல்லில் இல்லை. (உதாரணமாக முத்தை திரு பத்தி என்ற திருப் புகழ் பாடல்.) அவரது இந்தப் பாடலை யாரோ எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்றால் அவருக்கு நன்றி.
இப்பாடலை எழுதியவரும் இந்த திரைப்படத்தின் கதை வசனகர்த்தாவும் ஷக்தி கிருஷ்ணசாமி என்கிறார் திரு நாகராஜன். நன்றி ஸார்.
திரைப்படம்:அருணகிரிநாதர் (1964)
பாடியவர்:T M சௌந்தரராஜன், பி.சுசீலா

இசை:டி.ஆர்.பாப்பா

Nilavo Aval Irulo - Arunagirinathar Tamil Song - Tm Soundararajan :: Mp3-For.Me










நிலவோ அவள் இருளோ

ஒளியோ அதன் நிழலோ

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மை எங்கே

இனி நானா அவள் தானா

நிலவோ அவள் இருளோ

நிலவே அதன் ஒளியே ஆஆஆஆ

மலரே அதன் மணமே ஆஆஆஆ

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மை இங்கே

இனி நீயே அவள் ஏனோ

நிலவே அதன் ஒளியே

பாடும் கண்ணோடு ஆடுவேன்

பாவமே மறந்து பரதவிப்பாய்

பாடும் கண்ணோடு ஆடுவேன்

பாவமே மறந்து பரதவிப்பாய்

சேர்ந்தது சுகமே மறந்தது சொகமே

சேர்ந்தது சுகமே மறந்தது சொகமே

யாரினி உறவாகும்

நிலவோ அவள் இருளோஆஆஆஆ

ஒளியோ அதன் நிழலோஆஆஆஆ

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மை எங்கே

இனி நானா அவள் தானா

நிலவோ அவள் இருளோ

தேடும் கண்ணாலே பேசுவோம்

பேசியே இணைந்து சுகித்திருப்போம்

காதலின் சுகமே கனியிதழ் மோகமே

காவியம் வரைவோமே

நிலவே அதன் ஒளியே

மலரே அதன் மணமே

சுவைத்திடும் சொந்தமிங்கே

சுவை தரும் பெண்மையிங்கே

இனி நாமே மகிழ்வோமே


நிலவே அதன் ஒளியே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டிராத பாடல்... நன்றி சார்...

NAGARAJAN சொன்னது…

பாடலை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி . திரைப்படத்தின் வசனமும் இவரே.

கருத்துரையிடுக