பின்பற்றுபவர்கள்

புதன், 21 நவம்பர், 2012

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லைபாடியவரின் இனிமையான குரலா? பின்னனி இசையில் இல்லாத ஒரு மேதாவித்தனமா? எது இந்தப் பாடலை வசீகரிக்க வைக்கிறது?
இரவுக்கு நிலவால் அழகு வரும்
இந்தப் பாடலால் மனதுக்கு அமைதி வரும்.
ரொம்பவும் அபூர்வ பாடலாகிப் போனது.

திரைப் படம்: எதையும் தாங்கும் இதயம்
இசை: T R பாப்பா
பாடியவர்: சூலமங்கலம் S ராஜலக்ஷ்மி
எழுதியவர்: ஆத்ம நாதன்

http://www.mediafire.com/?uvuu0w71dhbabvs


உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

இனிக்க இனிக்க நீ பேசவில்லை
என்றாலும் என் நெஞ்சம் மறக்கவில்லை

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

செல்வ பரம்பரையில் பிறந்தாலும்
அதன் சிங்கார பிடியில் வளர்ந்ததில்லை
செல்வ பரம்பரையில் பிறந்தாலும்
அதன் சிங்கார பிடியில் வளர்ந்ததில்லை
உல்லாச உலகத்தில் இருந்தாலும்
நான் உழைப்பவர் துயரத்தை
மறந்ததில்லை மறந்ததில்லை

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை


இரவுக்கு நிலவால் அழகு வரும்

என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
இரவுக்கு நிலவால் அழகு வரும்
என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
உயிருக்கு உடலால் பெருமை வரும்
நம் உறவும் ஒரு நாள்
புதுமை பெறும் புதுமை பெறும்

உனக்கும் எனக்கும் வெகு தூரம் இல்லை
நான் நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதிற்கு இதம் தரும் பாடல்...

கருத்துரையிடுக