பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2012

பொழுதும் விடியும் பூவும் மலரும் பொறுத்திருப்பாய் கண்ணா


நல்ல கருத்துள்ள பாடல். இசையிலேயே மனமும் உடலும் உறங்கும். அத்துடன்  சுசீலா அம்மாவின் குரலும் சேர்ந்துவிட்டால் கேட்கவா வேண்டும்?

திரைப் படம்: வல்லவனுக்கு வல்லவன் (1965)
நடிப்பு: அசோகன், மணி மாலா
இயக்கம்: R சுந்தரம்
இசை: வேதா
பாடல்: கண்ணதாசன்http://www.divshare.com/download/13571815-99dபொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் கண்ணா கண்ணா

போனதை மறந்து வருவதை நினைந்து
சிரித்திருப்பாய் கண்ணா

கண்ணா சிரித்திருப்பாய் கண்ணா

பொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் கண்ணா

ஊருக்கு கிடைக்கும் நிம்மதி
ஒரு நாள் உனக்கும் பிறக்காதோ

அது உனக்கென பிறந்து
உனக்கென வளரும் எனக்கும் கிடைக்காதோ

கண்ணா எனக்கும் கிடைக்காதோ

பொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் கண்ணா

நாளைய உலகை நமக்கென தரவோர்
நாயகன் இருக்கின்றான்

அவன் நல்லவர் வாழும் இல்லத்தில்
எல்லாம் காவல் இருக்கின்றான்

கண்ணா காவல் இருக்கின்றான்

பொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் கண்ணா கண்ணா

போனதை மறந்து வருவதை நினைந்து
சிரித்திருப்பாய் கண்ணா

கண்ணா சிரித்திருப்பாய் கண்ணா

ல ல ல ல ல ல ல
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

1 கருத்து:

கருத்துரையிடுக