பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 நவம்பர், 2012

பனி விழும் பூ நிலவில் பாவை போல்


மலேஷியா வாசுதேவனின் இனிய குரல் நடிகர் ராஜேஷுக்கு கண கச்சித பொருந்தும். இதிலும் அப்படிதான். அழகான இசையில் நல்லதொரு பாடல்.

திரைப் படம்: தைப் பொங்கல் (1980)
இயக்கம், பாடல்: M G வல்லபன்
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், S P ஷைலஜா
இசை:  இளையராஜா
நடிப்பு: ராஜேஷ், ராதிகா   பனி விழும் பூ நிலவில்

பாவை போல் கண் வளர்ந்தாள்

அரும்பே செங்கரும்பே

தருவாய் மலர்வாய் தேன்

உறவுகள் தான் மலர

ஊரிலே பெண் பிறந்தாள்

கனியே கண்விழியே

வளர்வாய் தமிழ் போல் நீ

பனி விழும் பூ நிலவே

மார்பினில் உன் அபிணயம்

மான் விழி சொல் கவி மயம்

மார்பினில் உன் அபி நயம்

மான் விழி சொல் கவி மயம்


மார்பினில் உன் அபி நயம்

மான் விழி சொல் கவி மயம்


மகள் வர நீ தரும் ராகம்

மறைவினிலே பெற மோகம்

பூசைகள் அந்தியில்

தேவை தினமே

தேடும் மனமே

உறவுகள் தான் மலர

ஊரிலே பெண் பிறந்தாள்

கனியே கண்விழியே

வளர்வாய் தமிழ் போல் நீ

பனி விழும் பூ நிலவேதாய் மடி உன் உறைவிடம்

வான் மதி பொன் திருமுகம்

தாய் மடி உன் உறைவிடம்

வான் மதி பொன் திருமுகம்

கனவுகள் நீ தரும் நாளில்

தனிமையிலே மனம் பாடும்

ஆயிரம் பொன் மணி

தீபம் தருமா

தாயின் மனமே

பனி விழும் பூ நிலவில்

பாவை போல் கண் வளர்ந்தாள்

கனியே கண்விழியே

வளர்வாய் தமிழ் போல் நீ


பனி விழும் பூ நிலவே

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

சிறுவயதில் கேட்ட ஒரு அற்புத பாடல் இப்போது ஞாபகப்படுத்தி மனதிற்கு பரவசம் அளித்து விட்டீர். மகத்தான பாடகர் மலேசியா வாசுதேவன் ஷைலஜா ஜோடிப்பாடல் அத்தனையும் அருமை. குறிப்பாக “ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே”

கருத்துரையிடுக