பின்பற்றுபவர்கள்

புதன், 20 மார்ச், 2013

சிரிக்க தெரிந்தால் போதும் துயர் நெருங்காது

புரட்சித் தலைவரின் இன்னுமொரு அழகானப் பாடல். சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே. அவனும் இன்றைய உலகில் சிரிக்க மறந்து போனான். மீண்டும் அவன் சிரிப்பது அவன் மெண்டல் ஆன பிறகுதான் என்ற நிலை இன்று. அதற்கு முன் நாமும் சிரிக்க ஆரம்பிப்போம்.
தெளிவான தமிழிலில் இனிமையான இளமைக் குரல்களில் பாடல் ஜொலிக்கிறது.

திரைப் படம்: மாட புறா (1962)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
பாடிய குரல்கள்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, டி எம் எஸ்
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி
இயக்கம்: S A சுப்ரமணியம்

http://asoktamil.opendrive.com/files/Nl85MzQ0NTM2X1VMSzlyXzU5YmI/SirikkaTherinthal%20pothum.mp3

சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
வனத்துக்கு அழகு
பசுமை
வார்த்தைக்கு அழகு
இனிமை
குளத்துக்கு அழகு
தாமரை
நம் முகத்துக்கு அழகு
புன்னகை
வனத்துக்கு அழகு
பசுமை
வார்த்தைக்கு அழகு
இனிமை
குளத்துக்கு அழகு
தாமரை
நம் முகத்துக்கு அழகு
புன்னகை
சிரிக்க தெரிந்தால் போதும்
இரவும் பகலும் உண்டு
வாழ்வில்
இளமையும் முதுமையும் உண்டு
இரவும் பகலும் உண்டு
வாழ்வில்
இளமையும் முதுமையும் உண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
உறவை வளர்ப்பது
அன்பு
மன நிறைவை தருவது
பண்பு
பொறுமையை அளிப்பது
சிரிப்பு
இதை புரிந்தவர் அடைவது
களிப்பு
உறவை வளர்ப்பது
அன்பு
மன நிறைவை தருவது
பண்பு
பொறுமையை அளிப்பது
சிரிப்பு
இதை புரிந்தவர் அடைவது
களிப்பு

சிரிக்க தெரிந்தால் போதும்
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வரும் பதிவுகளில் இந்த பாடல் வரிகள் சிலவற்றை இணைத்து கொள்கிறேன் தங்களின் அனுமதியோடு...

நன்றி...

அப்பாதுரை சொன்னது…

கேளாத பாடல். நன்றி.

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் ஸார்,
இதில் பாடல் வரிகளோ, இசையோ, குரலோ எதிலும் எனக்கு பங்கில்லை. பாடலை எடுத்து வரிகளை எழுதி வெளியிடுவது மட்டுமே எனது வேலையாகயால் என்னுடைய அனுமதியே தேவை இல்லை. ஆனால் யாராயிருந்தாலும் உபயோகிக்கும் போது எனது கிணற்றுத் தவளை என்ற பெயரை இணைத்தால் பலருக்கும் போய் சேரும். இதில் ஏதும் விளம்பரமோ லாபமோ இல்லை.
கருத்துக்களை தெரிவித்த, தெரிவித்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் மீண்டும் நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

கருத்துரையிடுக