பின்பற்றுபவர்கள்

திங்கள், 20 மே, 2013

சிரித்தாள் தங்க பதுமை

கொஞ்சம் நீண்ட இடைவெளி. எனது தந்தையின் உடல் நலக் குறைவால் திடீர் சென்னை பயணமும், மருத்துவமனை அலைச்சலும்.

மீண்டும் பாடலுக்கு வருவோம்.
இந்தப் பாடலை பாடியவர்களின் திறமை, இசையமைத்தவரின் திறமை, இந்தப் பாடலை இவ்வளவு  சிறப்பாக கொண்டுவந்த மற்ற திறமைசாலிகளின் திறமையை விட எனக்கு பாடலின் அற்புதமான வரிகள் ஒரு படி மேலோங்கி நிற்பதாகவே தோன்றுகிறது .


திரைப் படம்: கண்ணன் என் காதலன் (1968)
குரல்கள்: T M S, P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: P நீலகண்டன்
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
பாடல்: ஆலங்குடி சோமு

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTMxMzg3Ml9CUmdUZF9jNjVh/Sirithal%20Thanga-Kannan%20En%20Kathalan.mp3

சிரித்தாள் தங்க பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை

சிரித்தாள் தங்க பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை

மார்கழி பனி போல் உடை அணிந்து
செம்மாதுளம் கனி போல் இதழ் கனிந்து
மார்கழி பனி போல் உடை அணிந்து
செம்மாதுளம் கனி போல் இதழ் கனிந்து
கார்க்குழலாலே இடை அளந்து
நீ காத்திருந்தாயோ எனை நினைந்து

அழகெனும் வடிவில் நிலை இழந்தேன்
இந்த ஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
அழகெனும் வடிவில் நிலை இழந்தேன்
இந்த ஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
பழகியும் ஏனோ தலை குனிந்தேன்
இங்கு பருவத்தின் முன்னே முகம் சிவந்தேன்

சிரித்தாள் தங்க பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை

கயல் விழி இரண்டில் வயல் அமைத்து
அதில் காதல் என்றொரு விதை விதைத்து
காலம் அறிந்து கதிர் அறுப்போமா
காவிய உலகில் குடியிருப்போமா

பஞ்சணை களத்தில் பூ விரித்து
அதில் பவள நிலாவை அலங்கரித்து
கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா
சுகம் கோடி கோடியாய் குவிப்போமா

சிரித்தாள் தங்க பதுமை

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல்... நன்றி...

தந்தையின் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் சார்...

Unknown சொன்னது…

நன்றி தனபால் ஸார். அவருக்கு இப்போது உடல் நிலை கொஞ்சமாக தேறியுள்ளது. நானும் நம்பிக்கையோடு தோகா வந்துவிட்டேன்.

myspb சொன்னது…

தங்களின் தந்தை விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இனிமையான பாடல் பகிரிவிற்க்கு நன்றி சார்.

Unknown சொன்னது…

நன்றி கோவை ரவி ஸார்

Raashid Ahamed சொன்னது…

தங்களை போன்ற ஒருவரை பெற்றெடுத்த தந்தை நூறாண்டு காலம் வாழ்வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Unknown சொன்னது…

ரொம்ப நன்றி ராஷித் ஸார்

கருத்துரையிடுக