பின்பற்றுபவர்கள்

சனி, 25 மே, 2013

நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று

வாழ்வில் தன்னம்பிக்கை தரும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணீர் குரலோன், தெய்வீக பாடகர் சீர்காழி S கோவிந்தராஜன்  அவர்கள் குரலில் கேட்க்கும் போது என்றைக்குமே நாளை பொழுது நல்ல படியாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது.
எல்லோரும் வாழ்க வளமுடன்.

திரைப் படம்: பொற்சிலை (1969)
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்
இசை: R. கோவர்தனம் அல்லது
S M சுப்பையா நாயுடு  ( குழப்பம்தான்)
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இயக்கம்: A V பிரான்சிஸ் 
நடிப்பு: ஜெமினி, ராஜ்யஸ்ரீ 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMjQ2NTYxMV9pbDVZYl8zMWRh/naalai%20pozhuthu%20unthan.mp3நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

பசியென்று வந்தவர்க்கு
புசியென்று தந்தவரை
பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா
பசியென்று வந்தவர்க்கு
புசியென்று தந்தவரை
பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா

ஆணென்று பெண்ணென்றும்
ஆண்டவன் செய்து வைத்த
ஜாதியும் இரண்டேயடா
தலைவன் நீதியும் ஒன்றேயடா

நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

போட்டி பொறாமைகளும்
பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா
போட்டி பொறாமைகளும்
பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா

சத்திய சோதனையை
சகித்து கொண்டே இருந்தால்
வெற்றியை காண்பாயடா
அதுவே வேதத்தின் முடிவாமடா

நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

இறைவன் நம்பிக்கை தருவானடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

//// சத்திய சோதனையை
சகித்து கொண்டே இருந்தால்
வெற்றியை காண்பாயடா
அதுவே வேதத்தின் முடிவாமடா ////

சிறப்பான வரிகள்... சிறந்த பாடல் பகிர்வுக்கு நன்றி...

வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக