பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 26 மே, 2013

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை

தமிழ் திரையுலகின் ஈடிணையற்ற பாடகர்களில் ஒருவரான திரு T M சௌந்திரராஜன் அவர்களுக்கு எமது அஞ்சலி.
அவருடைய பல சிறந்த பாடல்களுக்கு இந்தப் பாடல் மூலம் ஒரு பூமாலை.
அவர் வகையில், அவரைப் போல் ஒரு பாடகர் தமிழுக்கு அமைவது அரிது. இலக்கண சுத்தமான, தெளிவான உச்சரிப்பு,  பாடலைப் புரிந்து பாடும் தன்மை என எல்லா வகையிலும் நம் மனதை கவர்ந்த டி எம் எஸ் என அழைக்கப்பட்ட அவருடைய ஆன்மா சாந்தியடைய வணங்குவோம்.திரைப் படம்: வளர்பிறை (1962)
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி
இயக்கம்: D யோகானந்த்
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMzA1MDMzNF9TVWpEUl8xOWNj/Poojiyathukkulle.mp3
பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்
அவனை தெரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனை தொடர்ந்து சென்றால்
அவன் தான் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
அந்த ஏழையின் பேர்
உலகில் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்...

Raashid Ahamed சொன்னது…

இசையரசர் டிஎம்எஸ் மறையவில்லை மறையவும் மாட்டார். நிறைய பேர் மனங்களில் வாழ்கிறார். நீங்கள் பதிவு செய்துள்ள நூற்றுக்கணக்கான பாடல்களில் வாழ்கிறார். இவரைபோன்ற கலைஞர்களுக்கு மறைவில்லை அழிவில்லை. நடிகர் பாடும்போது அவரே பாடுவது போல் உயிரோட்டமாக பாட டிஎம்எஸ் ஒருவரால் தான் முடியும். நடிகர் திலகத்துக்கு முதலில் தூக்குத்தூக்கி படத்தில் டிஎம்எஸ் பாடியபோது அவரோடு ரசிகர்களும் பிரமித்து போனார்கள்.அவரே பாடுவது போல் அதிசயித்தனர். நடிகர் திலகமும் கூட அரைமனதோடு தான் பாட சம்மதித்தார். அதன்பிறகு நடிகர் திலகத்துக்கு டிஎம்எஸ் நிரந்தரமாக ஆகிப்போனார். முன்னால் பாடிய இசைமேதை சிஎஸ்ஜெயராமன் சகாப்தம் முடிவடைந்தது.

கருத்துரையிடுக