பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 மே, 2013

இரவு பாடகன் ஒருவன் வந்தான்

ஹிந்தியில் ஹம்ஷகல். ராஜேஷ் கண்ணா நடித்தது. தாலாட்டு பாடலுக்கு புலமைப்பித்தன் புதிது. பொதுவாக தமிழ் திரை தாலாட்டுப் பாடல்கள் சொந்தக் கதையும் சோகக் கதையும் உள்ளடக்கி இருக்கும்.
ஆனால் இதில் புதுமையாக, தூங்கப் போகும் குழந்தையை வர்ணித்தே தாலாட்டாக பாடியிருக்கிறார். பாராட்டக்குறியது. சிறிய பாடலானாலும் சிறந்த பாடல்.

திரைப் படம்: ஊருக்கு உழைப்பவன் (1976)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: M G ராமசந்திரன், வாணிஸ்ரீ
இயக்கம்: எம்.கிருஷ்ணன்
பாடல்: புலமைப்பித்தன்
பாடியவர்: K J யேஸுதாஸ்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMjg1MDYzN19FaUF2aV80MGE3/IravuPaadaganOruvan.mp3







இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்

இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்

புத்தனின் முகமோ
என் தத்துவ சுடரோ
புத்தனின் முகமோ
என் தத்துவ சுடரோ

சித்திர விழியோ
அதில் எத்தனை கதையோ
சித்திர விழியோ
அதில் எத்தனை கதையோ
அதில் எத்தனை கதையோ

இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்

ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தாலாட்டும் பாடல் அருமை... நன்றி...

பெயரில்லா சொன்னது…

in nakkeeran magazine an interview with naa kamarasan he said that it was written by him

கருத்துரையிடுக