பின்பற்றுபவர்கள்

சனி, 26 அக்டோபர், 2013

சிங்காரப் பைங்கிளியே பேசு

மெகா ஹிட் படம். பெரிய பாடலானாலும் இனிமையான பாடல். ஆரம்பத்தில் தமிழை மிக சுத்தமாக உபயோகித்திருக்கிறார் பாடலாசிரியர். வீசுதே... பேசுதே... என்று பாடலின் இறுதியில் பேச்சு மொழியை உபயோகப் படுத்திவிட்டார். பாடலின் வரிகள் அவ்வளவு தெளிவாக இல்லையாதனால் தவறுகள் இருக்கலாம்.

திரைப் படம்: மனோகரா (1954)
நடிப்பு: சிவாஜி, S S ராஜேந்திரன், கண்ணாம்பா, T R ராஜகுமாரி, கிரிஜா
இயக்கம்: L V பிரசாத்
பாடல்: உடுமலை நாராயணக் கவி
பாடியவர்கள்: A M ராஜா, ராதா S ஜெயலக்ஷ்மி
இசை: S V வெங்கடராமன் உதவி T R ராமனாதன்
வசனம்: மு கருணாநிதி

http://asoktamil.opendrive.com/files/Nl8yMjkyMzE5Ml9HVFZST19iZWY5/singarapaingiliye--manogara.mp3சிங்காரப் பைங்கிளியே பேசு
சிங்காரப் பைங்கிளியே பேசு
செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு
சிங்காரப் பைங்கிளியே பேசு

சங்கம் புகழ் முரசுக் கொண்ட தனியரசு
என் தமிழ் மொழிக்கே எதுவோ நீர் தரும் பரிசு
சங்கம் புகழ் முரசுக் கொண்ட தனியரசு
என் தமிழ் மொழிக்கே எதுவோ நீர் தரும் பரிசு

திங்கள் நிறை மலர் முகத்தில்
செவ்விதழ் சேர்த்து நிற்கும்
திங்கள் நிறை மலர் முகத்தில்
செவ்விதழ் சேர்த்து நிற்கும்
திருவே தருவேன் மனம் போல்
குறையாதொரு நூறு மட்டும்
சிங்காரப் பைங்கிளியே பேசு

நீரே சொந்தம் ஆனீர் பேச்சிலே
எதிரி நீரே சொந்தம் ஆனீர் பேச்சிலே

அந்த நினைவே மறந்தேன் உன் கண் வீச்சிலே

இந்த வீரர் எங்கள் நாட்டுக்கினி அதிபதியே

விஜயாள் ஒன்றே போதும் வெகுமதியே

ஹா
ம்

சிங்காரப் பைங்கிளியே பேசு
செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு
சிங்காரப் பைங்கிளியே பேசு

பாண்டிய நாட்டு பூங்குயில் பேடு
ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே
பாண்டிய நாட்டு பூங்குயில் பேடு
ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே

அது வேண்டிடும் சோழ மண்டல தென்றல்
ஓடி வீசுதே ஓடோடி வீசுதே
அது வேண்டிடும் சோழ மண்டல தென்றல்
ஓடி வீசுதே ஓடோடி வீசுதே

ஆசை குடிதனிலே விளைந்தாடிடும் வேளையிலே
ஆசை குடிதனிலே விளைந்தாடிடும் வேளையிலே
ஆணோடும் பெண்ணும் கண்ணோடு கண்ணால்
ஜாடை பேசுதே ரெண்டும் ஊடல் பேசுதே
ஆணோடும் பெண்ணும் கண்ணோடு கண்ணால்
ஜாடை பேசுதே ரெண்டும் ஊடல் பேசுதே

பளிங்கு போலே தெளிந்த நீரில்
மீன்கள் துள்ளி ஆடுதே
இரு மீன்கள் துள்ளி ஆடுதே
பளிங்கு போலே தெளிந்த நீரில்
மீன்கள் துள்ளி ஆடுதே
இரு மீன்கள் துள்ளி ஆடுதே

விளங்கும் எந்தன் விஜயாளின்
கண் மீன்கள் ரெண்டும் ஆடுதே
விழி மீன்கள் ரெண்டும் ஆடுதே
விளங்கும் எந்தன் விஜயாளின்
கண் மீன்கள் ரெண்டும் ஆடுதே
விழி மீன்கள் ரெண்டும் ஆடுதே

அலையோடு அலை தாவி
ஒன்று சேர்ந்ததே
அலையோடு அலை தாவி
ஒன்று சேர்ந்ததே

ஆம் அது போலும் இரண்டு
உள்ளம் ஒன்று சேர்ந்ததே
உள்ளம் ஒன்று சேர்ந்ததே
ஆம் அது போலும் இரண்டு
உள்ளம் ஒன்று சேர்ந்ததே
உள்ளம் ஒன்று சேர்ந்ததே

பளிங்கு போலே தெளிந்த நீரில்
மீன்கள் துள்ளி ஆடுதே
இரு மீன்கள் துள்ளி ஆடுதே


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் இனிமையான பாடல்...

Raashid Ahamed சொன்னது…

எந்த பாடகருக்கும் இல்லாத ஒரு அழகான இனிய குரல் ஏஎம் ராஜாவுடையது. அவருடைய எல்லா பாடல்களுமே கேட்க இனியவை.

கருத்துரையிடுக