பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

உன்னைக்காணாமல் நான் ஏது

உங்களைக் காணாமல் நான் ஏது, உங்களைக் எண்ணாத நாள் ஏது என்றாகிவிட்டது. அன்பர்கள் அனைவரும் நலமா? வாழ்க வளமுடன்.

ஒரு குறுகிய விடுமுறையில் சென்னை வந்து தஞ்சையின் வெளிவட்டப் பகுதியில் இணைய இணைப்பு கிடைக்காமல் 5 நாட்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து இன்று மீண்டும் பரபரப்பான சென்னை வாழ்க்கையில் மீண்டும் உங்களை சந்திக்கும் போது மகிழ்ச்சியே.

இன்றும் ஒரு இனிமையான இசை, குரல்களில்...பாடல் வரிகளில் என்று சொல்ல முடியவில்லை. இளையராஜா அனுசரித்து பாடல்வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார். கங்கை அமரன் புலவர் இல்லையே ஆகையால் பொறுத்துக் கொண்டு பாடலை ரசிப்போம். அருண்மொழி ஒரு நல்ல பாடகர். அவ்வளவாக தமிழ் படவுலகம் அவரை கவனிக்கத் தவறிவிட்டது.

திரைப்படம் : கவிதை பாடும் அலைகள் (1990)
நடிப்பு: ராஜ் மோகன், ஜனனி
இயக்கம்: T K போஸ்
பாடல்: கங்கைஅமரன்
பாடியவர்கள் : K S சித்ரா , அருண்மொழி
இசை: இளையராஜா

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTYzODUwNF9yaDZpNV85MDBm/UnnaiKaanaamal.mp3ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக் கரையெல்லாம்
காலடி தேடி நின்றேன்

கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்

வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்

ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டு காலம்

இனி எந்நாளும்
பிரிவேது அன்பே

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்

பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது

காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்

காலங்கள் போன போதும்
வானத்தைப்போல வாழும்

இது மாறாது
மறையாது அன்பே

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது


2 கருத்துகள்:

Raashid Ahamed சொன்னது…

தஞ்சையின் வெளிவட்ட பகுதியில் வந்து நிம்மதியான வாழ்க்கை என்றால் ஒரு கிராமத்து வாழ்க்கையின் சுகத்தை அனுபவிதிருக்கிறீர்கள். நல்லது நல்லது. இந்த பாடலும் இனிமை.

myspb சொன்னது…

//அருண்மொழி ஒரு நல்ல பாடகர். அவ்வளவாக தமிழ் படவுலகம் அவரை கவனிக்கத் தவறிவிட்டது.//

வாஸ்தவம் தான் சார். இருந்தாலும் அவரின் பங்களிப்பு திரையிசை பாடல்களில் இருக்கும். அதாவது அவர் ஒரு புல்லாங்குழல் கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே.

கருத்துரையிடுக