பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மாலை மயங்கினால் இரவாகும்

 P B ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழ் திரைபடங்களில் ஒய்வு பெறும் முன் இறுதியாக பாடிய பாடலாக இருக்கும் என நினைக்கிறேன். நடிகர் சுதாகருக்கு ஏற்ற குரலாக அமைந்துவிட்டது. அபூர்வமான பாடல்.
 
திரைப்படம்: இனிக்கும் இளமை (1979)
நடிகர்கள்:சுதாகர், ராதிகா 
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்குனர்: M.A. காஜா
பாடியவர்கள்: பி பி எஸ், S P ஷைலஜாhttp://asoktamil.opendrive.com/files/Nl8zNTczNDIyNl8yb2wxQl82NDRl/Maalai%20Mayangginal%20iravaagum.mp3
மாலை மயங்கினால்


இரவாகும்


இளம் மங்கை மயங்கினால்


உறவாகும்


மாலை மயங்கினால்


இரவாகும்


இளம் மங்கை மயங்கினால்


உறவாகும்


இரண்டும் மயங்கினால் எதுவாகும்


ஒரு இன்ப லோகமே உருவாகும்

மாலை மயங்கினால்


இரவாகும்


இளம் மங்கை மயங்கினால்


உறவாகும்

வானவில்லின் வண்ணம் ஏழு ஏன் வளைந்தது


என் கண்ணே


நாணம் வந்து தாளம் போட தலை குனிந்தது 


உன் முன்னே


ஆ 
 

வானவில்லின் வண்ணம் ஏழு ஏன் வளைந்தது


என் கண்ணே


நாணம் வந்து தாளம் போட தலை குனிந்தது 


உன் முன்னே
 

காமனிடம் ரதி தேவி கற்றது என்ன


அம்மம்மா சுகமல்லவோ


காமனிடம் ரதி தேவி கற்றது என்ன


அம்மம்மா சுகமல்லவோ

மாலை மயங்கினால்


இரவாகும்


இளம் மங்கை மயங்கினால்


உறவாகும் 

இரண்டும் மயங்கினால் எதுவாகும்


ஒரு இன்ப லோகமே உருவாகும்மாலை மயங்கினால்


இரவாகும்


இளம் மங்கை மயங்கினால்


உறவாகும்

வானம் பூமி இணையும் நேரம் மழையும் வந்ததா 


என் கண்ணே


நானும் நீயும் நனையும் போது குடையும் வேண்டுமா


என் கண்ணா


வாடையிலே ஆடை மூடி வந்த தென்றலா


அம்மம்மா நான் சொல்லவா

மாலை மயங்கினால்


இரவாகும்


இளம் மங்கை மயங்கினால்


உறவாகும்

மோன ராகம் பாடும் வேளை அர்த்தம் புரிந்ததா


சொல் கண்ணா


வேத கீதம் முடியும் போது விளக்கம் தெரிந்தது 


என் கண்ணே

ஆ 


மோன ராகம் பாடும் வேளை அர்த்தம் புரிந்ததா 


சொல் கண்ணா

வேத கீதம் முடியும் போது விளக்கம் தெரிந்தது 


என் கண்ணே


ஞான ரதம் ஏறி காதல் சொர்கம் போகலாம்


அம்மம்மா சுவையல்லவா


ஞான ரதம் ஏறி காதல் சொர்கம் போகலாம்


அம்மம்மா சுவையல்லவா

மாலை மயங்கினால் இரவாகும்


இளம் மங்கை மயங்கினால் உறவாகும்


இரண்டும் மயங்கினால் எதுவாகும்


ஒரு இன்ப லோகமே உருவாகும்


ல ல ல ல லலல ல ல ல ல லா லா லா லா

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டிராத பாடல் சார்... நன்றி...

கருத்துரையிடுக