பின்பற்றுபவர்கள்

திங்கள், 21 ஏப்ரல், 2014

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

அழகான பாடல். பாடல் வெளியான பின்பு பாடல் காட்சியில் பாடல் வரிகளை மாற்றியிருக்கிறார்கள். தணிக்கை கட்டுப் பாடு. கீழே நீல நிறத்தில் ஒரிஜினல் பாடல் வரிகள் உள்ளன.

திரைப் படம்: வீர அபிமன்யு (1965)
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: பி பி எஸ், P சுசீலா
பாடல்: கண்ணதாசன் அல்லது பூங்குயிலன்
இயக்கம்:  மதுசுதன் ராவ்
நடிப்பு: A V M ராஜன், காஞ்சனா

http://asoktamil.opendrive.com/files/Nl8zNjE1NTYwOV9IaVozdF9lOGRl/neeyum%20oru%20pennaanaal-veera%20abimanyu.mp3


நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

உன் நெஞ்சில் ஈரம் உண்டென்றால் இரவே விடியாதே

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

உன் நெஞ்சில் ஈரம் உண்டென்றால் இரவே விடியாதே

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

(முத்தமிடும் வேளையிலே இந்த மூக்குத்தி தடையாகும்)

 முத்த முகம் மீதினிலே மூக்குத்தி தடையாகும்

முத்த முகம் மீதினிலே இந்த மூக்குத்தி தடையாகும்

அதை சத்தமின்றி கழற்றிவிட்டால் நம் சந்தோஷம் மிகவாகும்

சந்தோஷம் மிகவாகும்

ம் ம் ம்பாயும் தென்றல் காற்றே நீ பறந்து செல்லாதே

இந்த பள்ளியறை உள்ளவரை சங்கே முழங்காதே

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே(கட்டித் தழுவும் வேளையிலே இந்த கை வளை தடையாகும்)

கைகள் தனியும் வேளையிலே இந்த கை வளை தடையாகும்

கைகள் தனியும் வேளையிலே இந்த கை வளை தடையாகும்

அதைக் கழற்றிவிட்டு மெல்ல அணைத்துக் கொண்டால்

நம் காதல் சுவையாகும்

காதல் சுவையாகும்கூவும் வண்ணக் குயிலே நீ தூக்கம் கொள்ளாதே

எங்கள் கொஞ்சும் மொழி கேட்கும் வரை பொழுதே மலராதே

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே


கால்களில் விளையாடும் சலங்கை காதலில் இசை பாடும்

கால்களில் விளையாடும் சலங்கை காதலில் இசை பாடும்

அதை இசைவில்லாமல் எடுத்து விட்டால் நம் உலகத்தில் ஆசை வரும்

உலகத்தில் ஆசை வரும்நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

உன் நெஞ்சில் ஈரம் உண்டென்றால் இரவே விடியாதே

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாடல் பற்றிய விளக்கங்களுக்கு நன்றி...

கருத்துரையிடுக