பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

இப்பாடலுக்கு சிவாஜியுடன் இணைந்திருப்பவர் பல படங்களில் இதற்கு முன் குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்த ஆலம் எனும் நடிகை. இதற்கு பிறகு அவருக்கு குத்தாட்ட வாய்ப்பும் கிடைக்கவில்லை. கதாநாயகி போன்று டூயட் பாடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இதற்கு பிறகோ அல்லது முன்னரோ மன்மத லீலையில் கமலுடன் கதாநாயகியாக நடித்தார். அத்துடன் காணாமல் போனார்.

இந்தப் பாடலில் டி எம் எஸ் அவர்களின் சற்று மிகையான குரலைத் தவிர  மற்றபடி அழகான பாடல். அதுவும் சிவாஜி என்பதற்காக குரலை சற்று உயர்த்திப் பாடியிருப்பார்.

சிவாஜியின் புகழுக்கு ஒரு அங்கமாக திகழ்ந்த இவரின் இறப்புக்கு சிவாஜி குடும்பத்தினர் ஒருவரும் வரவில்லை என்பதாக இணையத்தில் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறாரே? உண்மையா?

திரைப் படம்: என்னைப் போல் ஒருவன் (1978/1976??)
பாடியவர்கள்: டி  எம் எஸ், P சுசீலா
பாடல்: வாலி


இசை: M S விஸ்வனாதன் 
இயக்கம்: T R ராமண்ணா 
நடிப்பு: சிவாஜி, உஷாநந்தினி,
http://asoktamil.opendrive.com/files/Nl8zNjIwNjc2NF9KTExYcF9mYWQ2/Velaale%20Vizhigal.mp3

வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

ஆ ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ
நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே
மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய
பூப்போன்ற மங்கை இங்கே
ஆ ஆ ஆ
பூப்போன்ற மங்கை இங்கே
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

வேலாலே விழிகள் 
இன்று ஆலோலம் இசைக்கும்

பட்டுச்சேலையில் மின்னும் பொன்னிழை
பாவை மேனியில் ஆடும்
தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம்
கட்டுக் காவலை மீறும்

ஆ ஆ ஆ ஆ
கட்டும் கைவளை தொட்டும் மெல்லிசை
மொட்டும் உன்னுடன் ஓடும்
சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும்
பட்டம் போல் விளையாடும்

பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால்

நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

வேலாலே விழிகள் 
இன்று ஆலோலம் இசைக்கும்

தங்கச் செங்கனி அங்கம் உன்னுடன்
சங்கமம் ஆவது என்று
திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன்
பொங்கும் நாடகம் என்று

ஓஓஓ...ஓ...
தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம்
தத்தைக்கே தரவென்று
சித்தம் சொன்னது வேகம் வந்தது
நித்தம் ஆயிரம் உண்டு

பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும்

கூடுங்கள் என்றோ பெண்ணுள்ளம் சொல்லும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

ம் ம் ம் ம் 
வேலாலே விழிகள் 
இன்று ஆலோலம் இசைக்கும்

சிறு நூலாலே இடையில்
 
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்1 கருத்து:

கரோக்கி இசை அலைகள் சொன்னது…

இந்த பாடலின் சரணத்தை கேட்கும் போது உற்சாகம் பொங்குவதை உணர முடிகிறது !!

கருத்துரையிடுக