பின்பற்றுபவர்கள்

புதன், 23 ஏப்ரல், 2014

மாதா பிதா குரு தெய்வம்

இப்போது இதெல்லாம் போல பாடல்கள் வருவதில்லை. அப்படியே வந்துவிட்டாலும் நம் குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. இந்தப் பாடலில் வரும் பல சொற்கள் இன்றைக்கு வழக்கத்தில் இல்லை. மாதா பிதா குரு தெய்வம் என்பது மம்மி டாட்டி டீச்சர் காட் என்றால்தான் புரியும். காலத்தின் கோலம். நாம் தாய் மொழியை மறந்து அடுத்த மொழியை வளர்க்க தலைப்பட்டுவிட்டோம். அடுத்தவன் குழந்தையை ஊட்டி வளர்த்தால் நம் குழந்தை தானாக வளரும் என்பதை தப்பாக எடுத்துக் கொண்டுவிட்டோம்.


திரைப்படம்: நான் பெற்ற செல்வம் (1956)
பாடியவர்: ஏ.பி. கோமளா
இயற்றியவர்: K M ஷெரிஃப்
இசை: G. ராமநாதன்
இயக்கம்: K சோமு 
நடிப்பு: சிவாஜி, G வரலக்ஷ்மி
  -http://asoktamil.opendrive.com/files/Nl8zNjI5MzM3Ml9kNHJkT19mMDA0/Maata%20Pita%20Guru%20Deivam%20-%20Naan%20Petra%20Selvam.mp3

மாதா பிதா குரு தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்
 
ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது 
நாம் ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது 
நாம் ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதி உணர்ந்தது போலே
ஓதி உணர்ந்தது போலே 
என்றும் உண்மையாய் நடந்து உயர்வோம் மண்மேலே
 
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்
 
காலையில் எழுந்ததும் படிப்பு
காலையில் எழுந்ததும் படிப்பு 
பின்பு காலைக் கடனையும் உணவையும் முடித்து
காலையில் எழுந்ததும் படிப்பு 
பின்பு காலைக் கடனையும் உணவையும் முடித்து
நூலைக் கையிலே எடுத்து
நூலைக் கையிலே எடுத்து 
பள்ளி நோக்கி நடந்து கற்பது சிறப்பு
 
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்
 
தெய்வம் தொழுதிட வேண்டும் 
நம் தேசத்தின் மீதன்பு செலுத்திட வேண்டும்
கைத்தொழில் பழகிட வேண்டும் 
மஹாத்மா காந்தியின் சொற்படி நடந்திட வேண்டும்
 
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களின் ஆதங்கம் உண்மை...

சிறப்பான பாடல்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைய பதிவு உணளுக்கும் உதவக் கூடும் ஐயா...

http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html

Unknown சொன்னது…

நன்றி தனபாலன் ஸார்.

கருத்துரையிடுக