பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 11 ஜூன், 2013

கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்


L R ஈஸ்வரி பாடிய சிறந்த பல பாடல்களில் எனக்கும் பிடித்த பாடல் இது.

கம்பீரமான திருமதி விஜய நிர்மலாவிற்க்கு இணையான குரலாக

அமைந்துவிட்டது.

கண்ணுக்கு குளிரான படப்பிடிப்பு. இனிமையாக பாடப் பட்ட பாடல்.

மென்மையான காதல் பாடல்.

திரைப்படம்: என் அண்ணன் (1970)

நடிப்பு: எம்.ஜி,ஆர் ஜெயலலிதா

இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர்கள் முத்துராமனும் விஜய நிர்மலாவும்

பாடகர்கள்: P.B.ஸ்ரீநிவாஸ் எல்.ஆர்.ஈஸ்வரி

இசையமைப்பாளர்: கே.வி.மகாதேவன்  

பாடலாசிரியர்: வாலி 

இயக்குநர்: ப.நீலகண்டன் 



http://asoktamil.opendrive.com/files/Nl8xMzk5NjkwM19OaU1TTl8zODcw/Kannukku%20Theriyatha.mp3







 


கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்


ஒரு முறையா இருமுறையா


உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இருமுறையா

உன்னைக் கேட்கச் சொல்லும்
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
 
நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்

ஒரு முறையா இருமுறையா


உன்னைக் கேட்கச் சொல்லும்

ஒரு முறையா இருமுறையா

உன்னைக் கேட்கச் சொல்லும்

மலர்க் கூட்டம் மெத்தை விரிக்க

மணக்க  மேனி குளிர்ந்திருக்கபழத்தோட்டம் பக்கம் இருக்க

இனிக்க  கைகள் பறித்திருக்க
உள்ளூறக் கள்ளூறும் கனியல்லவோ
நானந்தக் கனியுண்ணும் கிளியல்லவோ

கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இரு முறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
பன்னீரில் மெல்லக் குளித்து 
எழுந்து பாவை உடல் சிலிர்க்க 
முன்னேறும் வழி தெரிந்து
நடந்து கால்கள் களைத்திருக்க
ஒரு போது மடி மீது இளைப்பாறலாம்
மறுபோது இதழோரம் பசியாறலாம்

கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இரு முறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா

உன்னைக் கேட்கச் சொல்லும்

பயிலாதக் கலை பயின்று

முயன்று பார்வை சிவந்திருக்க
துயிலாமல் விழித்திருந்து
தொடர்ந்து பாடம் படித்திருக்க

சேவல்கள் கூவாமல் இருந்தாலென்ன
பகல்கூட இரவாகத் தெரிந்தாலென்ன     
   
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்

ஒரு முறையா இரு முறையா

உன்னைக் கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்




ஞாயிறு, 9 ஜூன், 2013

அவள் ஒரு நவரச நாடகம்

அருமையானப் பாடல். ஆனால் படத்தில் திணிக்கப் பட்டது போல இருக்கும். நடிகை லதா அவர்களுக்கு இந்தப் படத்தில் ஏதும் பாடல் காட்சி இல்லாததால் (அந்த படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பே குறைவுதான்) எம் ஜி யாரின்  யோசனையின்  பேரில் இந்தப் பாடல் பின்னதாக சேர்க்கப் பட்டதாக அறிகிறேன்.
S P B யின் இளமை ததும்பும் இனிய குரலில் அழகானப் பாடல்.

திரைப் படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன் 
இயக்கம்: எம் ஜி யார்
நடிப்பு:எம் ஜி யார், லதா



http://asoktamil.opendrive.com/files/Nl8xMTI4MDg1N182NW9FMl8wZDNh/Aval%20oru%20navarasa-Ulagam%20surtrum%20Valipan.mp3






அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்

ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
அவள் ஒரு நவரச நாடகம்

குறுநகை கோலத்தில் தாமரை
கோடைக் காலத்து வான்மழை
குறுநகை கோலத்தில் தாமரை
கோடைக் காலத்து வான்மழை

கார்த்திகைத் திங்களில் தீபங்கள்
கார்த்திகைத் திங்களில் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா
ஹ ஹா ஹ ஹா ஹ ஹா ஹ ஹா

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

அவள் ஒரு நவரச நாடகம்

வெள்ளி, 7 ஜூன், 2013

தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும்


அழகான தமிழிலில் டி எம் எஸ் ஸும், சுசீலா அம்மாவும் இனிமையாக வழங்கியுள்ளனர்.

இலக்கண தமிழிலில் அமைந்த இந்தப் பாடலில் இடையில் சில்லென என்று ஒரு வார்த்தை வருகிறதே?  அது தமிழ் வார்த்தையா? Chill என்பதற்கான உரு என நினைக்கிறேன்.

இந்தப் பாடல் நீண்ட காலத்துக்கு முன் திரு தமிழன்பன் விரும்பிக்கேட்டிருந்தார். இப்போதுதான் கிடைத்தது. அதற்குள் அவருக்கு இந்தப் பாட்லும் கிடைத்திருக்கலாம்.

திரைப் படம்: தேவி (1968)
நடிப்பு: முத்துராமன், தேவிகா
இசை: V. தக்ஷிணாமூர்த்தி
பாடல்: கண்ணதாசனாக இருக்கலாம்.

இயக்குனர்: ஏ.கே.வேலன்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMjg5NDc0MF9KWTg4MF82ODkx/Thithikkum%20muthamize-Devi-TMS%20PS.mp3






தித்திக்கும் முத்தமிழே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூங்குனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பூங்குனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பொதிகை மலை தந்த செல்வமே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

வானத்து நிலவொடு வையத்தில் பிறந்த உன் வயதை அறிந்தவர் இல்லை
வானத்து நிலவொடு வையத்தில் பிறந்த உன் வயதை அறிந்தவர் இல்லை
மதுரை நகர் தங்க மாடத்தில் நீ கொண்ட வளத்துக்கும் ஈடிணையில்லை
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற தென் திசை மண்ணில் பிறந்தாய்
தென் திசை மண்ணில்
தென் திசை மண்ணில் பிறந்தாய்
தெய்வப் புலவரின் சென் நா பரப்பிலும் சேர்வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
தெய்வப் புலவரின் சென் நா பரப்பிலும் சேர்வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
இமய மலைத் தொட்டு குமரி முனை வரை இரு கையும் வீசி நடந்தாய்
இரு கையும் வீசி நடந்தாய்
இயல் இசை நாடகம் என மூன்று கிளைவிட்டு யாவரும் போற்றிட வாழ்ந்தாய்
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

புதன், 5 ஜூன், 2013

On a hottu summeru morning

நக்கலான பாடல்களுக்கே அன்று ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடல்கள் எழுதப்பட்டன. மற்ற படி ஆங்கிலம் சாதாரண தாலாட்டிலும், காதல் ரசம் கொட்டும் பாடல்களிலும் இல்லை.
ஆனால் இன்றோ.....தமிழ் பாடலை   அல்லது பாடலில் தமிழை தேடவேண்டியுள்ளதே!

S P B அட்டகாசமாக பாடிய பாடல் இங்கே.
பாடல் வரிகளை எழுதி முடிப்பதற்க்குள் போதும் போதும் என ஆகிவிட்டது.
இதை எழுதிய கவிஞரை நினைத்துப் பார்த்தேன்.    வாழ்க வளமுடன்.

திரைப் படம்: ராணி யார் குழந்தை (1972)
பாடியவர்: S P பாலசுப்ரமணியம்
இசை: T V ராஜு
பாடல்: தெரியவில்லை
இயக்கம்: D யோகானந்த்
நடிப்பு: ஜெயஷங்கர், லக்ஷ்மி

http://asoktamil.opendrive.com/files/Nl8xMzM4OTcxNl9ZbGpOcl83M2Vi/OnAHotSummerMorning.mp3





On a hottu summeru morning
A girlu wentu walking
Her faceu பலே fineu
The sweety isu mineu

On a hottu summeru morning
A girlu wentu walking
Her faceu பலே fineu
The sweety isu mineu

மாடி வீட்டு பொண்ணு
ஒரு ஜோடி தேடும் கண்ணு
ஆடி ஆடி நடக்கும் போது
அதிருதடா மண்ணு

 ஐயய்யோ What shall I do
Tell me what to do
அம்மம்மோ what can I do
I am mad after you


கொக்கர கொகோ
கொக்கர  கொகோ
கோ கோ

ஹையா

ஆகா rollu goldu  மேனி
நீ ரொமா புரி ராணி
சும்மா தூண்டில் போட்டு இழுக்குதம்மா
உன்னுடைய பாணி

உன் பருவத்திலே sexxu
என் நெஞ்ஜத்திலே fixxu
நெருங்கி நெருங்கி பழகும் போது
நீயும் நானும் mixxu


ஐயய்யோ What shall I do
Tell me what to do
அம்மம்மோ what can I do
I am mad after you

என் கையி ரொம்ப ராசி
நீ தொட்டு பாரு ரோஸி
பைய பைய பழகி வந்தால்
காதல் ரொம்ப easy

ஊரை சுத்தும் பாமா
நான் ஒண்டிக்கட்டை தாம்மா
உனக்கும் எனக்கும் பொருத்தமுண்டு
முடிச்சு போடலாமா


ஐயய்யோ What shall I do
Tell me what to do
அம்மம்மோ what can I do
I am mad after you

கொக்கர கொகோ
கொக்கர  கொகோ
கோ கோ
கோ கோ

ஞாயிறு, 2 ஜூன், 2013

அந்தி வரும் நேரத்திலே அஞ்சு வண்ண பூவெடுத்து

சின்ன வயதில் கேட்ட பாடல். (சிலோன் ரேடியோதான்) சரணம் ஆரம்பத்திலும் இறுதியிலும் மட்டுமே வரும். திருமதி சுசீலா அம்மா வழக்கம் போல  மிக மேன்மைக் குரலில் பாடியிருக்கிறார்.

திரைப் படம்: நீ வாழ வேண்டும் (1977)
குரல்கள்: P ஜெயசந்திரன், P சுசீலா
இசை : M S விஸ்வனாதன்
இயக்கம்: A. பீம்சிங்கு
நடிப்பு: முத்துராமன், சுமிதிரா

http://asoktamil.opendrive.com/files/Nl85MzQ3MTg5X0F5bHg1XzA5Zjk/Anthi%20Varum%20Nerathile.mp3


அந்தி வரும் நேரத்திலே
அஞ்சு வண்ண பூவெடுத்து
நாள்தோறும் அம்பு விடும் மன்மத ராஜா
உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா

முத்து வண்ண மாலையிட்டு
மோக வண்ண சேலை கட்டி
தேராட்டம் ஆடி வரும் தேவதை யாரோ
இந்த தேவதைக்கு பெண்ணழகு ரதி என்னும் பேரோ

கண்ணிரண்டில் உண்ணுவதும்
கையொடு கை பின்னுவதும்
என்ன கலை தெரியவில்லை
இதை பள்ளியிலும் படிக்கவில்லை

இன்ப வெறி கொள்ளுவதும்
ஈருடல்கள் துள்ளுவதும்
என்ன சுகம் புரியவில்லை
எந்த ஏடும் இதை விளக்கவில்லை

பாவை எந்தன் உள்ளம்
போதும் போதும் என்னும்

போதை ஏறும் கண்கள்
தேவை தேவை என்னும்
மௌன மொழி கேட்டேனடி
அதில் மாய வலை பார்த்தேனடி

கங்கை முடி சங்கரனார்
காமன் உனை ஏன் எரித்தான்
மோகம் என்னும் துயர் கொடுத்தாய்
முப்புரம்போல் உனை எரித்தான்

ஆட வந்த சங்கரனை
ஆட்டி வைத்த மன்மதனை
பூமிதன்னில் அழிப்பதுண்டோ
ஞானிகளும் ஜெய்ப்பதுண்டோ

யாகம் யோகம் என்று
கூறும் யாவும் இங்கு

காமம் மோகம் கண்டு
மாறும் மாறும் என்று
எத்தனையோ சாட்சியுண்டு
விஸ்வாமித்திரனின் கதையும் ஒன்று

அந்தி வரும் நேரத்திலே
அஞ்சு வண்ண பூவெடுத்து
நாள்தோறும் அம்பு விடும் மன்மத ராஜா
உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா
மன்மத ராஜா மன்மத ராஜா