பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

இனிமையான குரல்கள் நல்ல இசையுடன் பிண்ணி பிணைந்து வருகிறது


திரைப் படம்: தெய்வ பலம் (1959)
இயக்கம்: வசந்த குமார் ரெட்டி
குரல்கள்: P B S, S ஜானகி
இசை: அஸ்வதாமா
நடிப்பு: பாலாஜி, பத்மினி






Play Music - Embed Audio Files -






ம் ம் ம் ம் ம் ம்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

6 கருத்துகள்:

அமைதி அப்பா சொன்னது…

//மலரோடு விளையாடும் தென்றலே வாராய்//

அற்புதமான பாடலைக் கேட்கச் செய்தமைக்கு எனது நன்றிகள்.

பெயரில்லா சொன்னது…

அற்புதமான பாடல்.நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.
இந்த பாடலின் இசையமைப்பாளர் அஸ்வத்தாமா வீணை காயத்ரியின் தந்தையார் ஆவார்.

அன்புடன்
தாஸ்

Unknown சொன்னது…

நன்றி தாஸ், இந்த பாடலின் இசையமைப்பாளர் அஸ்வத்தாமா வீணை காயத்ரியின் தந்தையார் இது எனக்கு ஒரு புதிய செய்தி

றியாஸ் குரானா விரும்பி கேட்ட பாடலை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைப்பது அரிதுதான் என நினைக்கிறேன்.

மாற்றுப்பிரதி சொன்னது…

முயற்சி செய்யுங்கள் தோழர்..................
தமிழ் திரையிசைப் பாடல்கள்
அனைத்தையும் கேட்கும் படி
ஏதாவது வலைத்தளம் இருக்கிறதா
இருந்தால் எனக்கு அறிமுகம் செய்யங்கள்
தோழர்.

அன்புடன்
றியாஸ் குரானா..

meenamuthu சொன்னது…

என்ன சொல்ல.. மனதை(கவர்ந்த) மயக்(கும்)கிய பாடல்!நன்றி நன்றி.

Raashid Ahamed சொன்னது…

கேட்க இனிய மென்மையான நெஞ்சை வருடும் ஒரு அமுத கானம். ஜானகி அவர்கள் பல தலைமுறை கண்ட பாடகி.

கருத்துரையிடுக