பின்பற்றுபவர்கள்

சனி, 14 மே, 2011

நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..

நல்ல பண்புள்ள காதல் கடிதம். எத்தனை அழகான கவிதை வரிகள்! வரம்பு மீறாத கடிதம்.

திரைப் படம்: பேசும் தெய்வம் (1967)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: சிவாஜி, பத்மினி
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
குரல்: T M Shttp://www.divshare.com/download/14335065-23e


நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..
நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..

நான் அனுப்புவது கடிதம் அல்ல..

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..
நான் அனுப்புவது கடிதம் அல்ல..

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..
நான் அனுப்புவது கடிதம் அல்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக