பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 மே, 2011

ஒரு வானவில் போலே..என் வாழ்விலே வந்தாய்..

இந்த பாடலுக்கான குரல் தேர்வுதான் இந்த பாடலின் வெற்றி என எனக்கு தோன்றுகிறது. அழகான இசையில் ஒரு நல்ல பாடல்.


திரைப் படம்: காற்றினிலே வரும் கீதம் (1978)

பாடும் குரல்கள் ஜெயசந்திரன், S ஜானகி
இசை: இளையராஜா
இயக்கம்: S P முத்துராமன்
நடிப்பு: முத்துராமன், கவிதா
பாடல்: கண்ணதாசன்

http://www.divshare.com/download/14949724-3faஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்...
என் உயிரிலே நீ கலந்தாய்..

ஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்..
என் உயிரிலே நீ கலந்தாய்..

ஒரு வானவில்..

வளர் கூந்தலின் மனம் சுகம்..
இதமாக தூங்க வா..
வனராணியின் இதழ்களில்..
புதுராகம் பாட வா..

மடி கொண்ட தேனை மனம் கொள்ள..
வருகின்ற முல்லை இங்கே..
கலை மானின் உள்ளம் கலையாமல்..
களிக்கின்ற கலைஞன் எங்கே..

கலைகள் நீ கலைஞன் நான்..
கவிதைகள் பாட வா..
ஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்..
என் உயிரிலே நீ கலந்தாய்..
ஒரு வானவில்..

உனக்காகவே கனிந்தது..
மலைத்தோட்ட மாதுளை..
உனக்காகவே மலர்ந்தது..
கலைக்கோயில் மல்லிகை..

இனிக்கின்ற காலம் தொடராதோ..
இனி எந்தன் உள்ளம் உனது..
அணைக்கின்ற சொந்தம் வளராதோ..
இனி எந்தன் வாழ்வும் உனது

தொடர்கவே.. வளர்கவே..
இது ஒரு காவியம்..
ஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்..
என் உயிரிலே நீ கலந்தாய்..

ஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்..
என் உயிரிலே நீ கலந்தாய்..
ஒரு வானவில்..

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

கவியரசர் கண்ணதாசன் இசையரசர் இளையராஜா கூட்டணியில் வந்த அத்தனை பாடல்களும் சிறந்தவை இனியவை. மேலும் இந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.

கருத்துரையிடுக