பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 29 மே, 2011

சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு..

புதுமை பெண்ணின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பாடல். பாடலின் வேகமும் குரலும் அதற்க்கு ஈடு. அவரின் அந்த நாள் எண்ணங்கள் இன்னாளில் இப்போது நிறைவேறினவோ. வாழ்த்துக்கள்


திரைப் படம்: சவாலே சமாளி
குரல்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு : சிவாஜி, ஜெயலலிதாhttp://www.divshare.com/download/14955429-8b6சம் சம் சம் சம்சம் சம்
 சம் சம் சம்சம்
சம் சம் சம் சம்சம்
லல்லல்லா
சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு
சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு

சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
கட்டுப்பாடு.. ஹோ ஹோ

மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்
டடர டட்ட டா டடடர ரட்டட..
மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்

மண்ணில் நடக்கும் நதியே
உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்

உங்கள் வழியே உங்கள் உலகு
இந்த வழிதான் எந்தன் கனவு
ர ர ர ர ர ர ர ர ரீ
ர ர ர ர ர ர ர ர ர..

சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
கட்டுப்பாடு.. ஹோ ஹோ

வளரும் தென்னை மரமே
நீ வளர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன்
டடர டட்ட டா டடடர ரட்டட..

வணங்கி வளையும் நானல்
நீ வளைவதை போல் தலை குனிவதில்லை
பார்க்கும் கண்கள் பனிய வேண்டும்
பாவை உலகம் மதிக்க வேண்டும்
ர ர ர ர ர ர ர ர ரீ
ர ர ர ர ர ர ர ர ர..

சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு

ஆ ஆ ஆ ர ர ர ஹா ல ல ல ல ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக