பின்பற்றுபவர்கள்

திங்கள், 9 மே, 2011

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...

இசையமைப்பாளர் R ராமானுஜம் மிகச் சிறப்பாக இசையமைத்து மிக அருமையாக இளமையை கிளரும் வகையில் S P B யும், P சுசீலா அம்மாவும் கலக்கி இருக்கிறார்கள்.


திரைப் படம்: ஆனந்த பைரவி (1978)
இசை: R ராமானுஜம்
நடிப்பு: ரவிசந்திரன், K R விஜயா
இயக்கம்: மோகன் காந்திராம்Music File Hosting - Listen Audio -

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்....
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்...
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்...

சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்...
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்...
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்...
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்...

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...

உங்களின் அன்பு நினைவினிலே...
என் மனம் வாழும் உலகினிலே...
கண்களின் ஜீவ ஒளியினிலே...
சொர்கம் தோன்றுமோ...

தேவியின் பால் மணம் தேவனின் கோபுரம்...
தேவியின் பால் மணம் தேவனின் கோபுரம்...
அழகின் மடியில் வசந்தம் மலரும்...
அழகின் மடியில் வசந்தம் மலரும்...

அத்தான்...

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...

குங்கும கோலம் முகத்தினிலே...
மங்கள தாலி கழுத்தினிலே...
சந்தன பேழை அழகினிலே...
தெய்வம் மயங்குமோ...

காலமே ஓடி வா...
காவியம் பாடி வா...
காலமே ஓடி வா...
காவியம் பாடி வா..

உயிரில்...
ம் ம் ம் ம்...
உணர்வில்...
ஓ ஓ ஓ ஓ...
கலந்தே...
ஆ ஆ ஆ...
மகிழ்வோம்...

உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்...

அன்பே...

சிரித்தால் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்...
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்...

கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்..

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...


1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக