பின்பற்றுபவர்கள்

திங்கள், 17 டிசம்பர், 2012

நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்

மலேஷியா வாசுதேவனின் இனிய குரலில் ஒரு இனிய இளையராஜாவின் பாடல். பெண் குரல் சுஜாதாவா ஜென்ஸியா என்று தெரியவில்லை. திரு நாகராஜன் தான் சொல்ல வேண்டும். காணொளி சுஜாதா மோகனின் தொடர்பில் இருப்பதால் அவராக இருக்கலாம். எனிவே...பாடல் அருமை.

திரைப்படம் : இளமைக்கோலம் (1980)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சுஜாதா
பாடல் வரிகள் : கங்கை அமரன்
இசை : இளையராஜா

நடிப்பு: ப்ரதாப், சுமன், ராதிகா
இயக்கம்:N வெங்கடேஷ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NjM2Nl9rWXU1RF85YzRm/Nee%20Illatha%20pothu%20-Ilamai%20Kolam.mp3

நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

முதன்முதலில் தொடும் வரை
தினம் நான் எங்கோ
விரல் நுனிகள் படும் வரை
விழி தான் தூங்க

காவியம் பாடும் காதல் பூங்காற்று
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே

நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

எது வரையில் சுகம் என
அதை காண்பேன்
இதழ் முழுவதும் சுவை என
அதை நான் சேர்வேன்

ஏங்கிடும் போது எண்ணம் தானாட
இருமேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை

நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு
லா ல ல ல ல ல ல ல ல லலலலலா

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Female Voice : S.P.SHAILAJA

கருத்துரையிடுக