பின்பற்றுபவர்கள்

வியாழன், 20 டிசம்பர், 2012

அதி காலை நேரம் கனவில் உன்னை

அழகானப் பாடல். இசையின் ஆதிக்கம் அதிகமில்லாமல் மென்மையாக பாடப் பட்ட ஒரு பாடல்.
இதே மெட்டில் சித்ரா பாடியிருக்கும் மற்றும் ஒரு பாடலும் இங்கே இருக்கிறது தவற விடாதீர்கள்.
அபூர்வமான பாடல்களில் ஒன்று.

திரைப் படம்: நான் சொன்னதே சட்டம் (1988)
குரல்கள்: ஆஷா போன்ஸ்லே,
 S P  பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
பாடல் எழுதியவர், இயக்குனர் விபரங்கள் கிடைக்கவில்லை
நடிப்பு: ரேகா, சரண் ராஜ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NjExM19xNFg4UF80NzI3/Athi%20Kaalai%20Nera.mp3


http://www.mediafire.com/?jk7urcd51c3pyquஇந்தப் பாடலின் பின்னனியில் நீங்கள் பார்த்துகொண்டிருப்பது டோஹா கடற்கரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் லைட்டிங்க் அமைப்புகள்.அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னை சேர்த்தேன்

அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னை சேர்த்தேன்

விழி நீங்கிடாமல்
நீந்துகின்ற தென்றலே
ஹோய்
உன்னை சேர்ந்திடாமல்
வாடும் இந்த அன்றிலே
ஹோய்

ல ல ல ல ல ல லா

முல்லை பூவை
மோதும்
வெண் சங்கு போல
ஊதும்

காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு

வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை

நூறு ராகம் கேட்கும்
நோயை கூட தீர்க்கும்

பாதி பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றி தந்தாள்
என்னை ஏற்றுக் கொண்ட மாது

தேவியை மேவிய ஜீவனே
நீ தான்
நீ தரும் காதலில் வாழ்பவள் நான் தான்

நீ இல்லாமல் நானும் இல்லயே

அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னை சேர்த்தேன்
விழி நீங்கிடாமல்
நீந்துகின்ற தென்றலே
ஹோய்
உன்னை சேர்ந்திடாமல்
வாடும் இந்த அன்றிலே
ஹோய்

அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்

மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆறும் சூடு

மாதம் தேதி பார்த்து
மனது சொல்லிக் கேட்டு

வேளை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்

நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்

காடு மேடு ஒடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து
வாடும்

வாடலும் கூடலும்
மன்மதன் வேலை
வாழ்வது காதல் தான்
பார்க்கலாம் நாளை

பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ

அதி காலை நேரம்
கனவில் உன்னை பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னை சேர்த்தேன்

விழி நீங்கிடாமல்
நீந்துகின்ற தென்றலே
ஹோய்
உன்னை சேர்ந்திடாமல்
வாடும் இந்த அன்றிலே
ஹோய்

ல ல ல ல ல ல ல லலாலா
ல ல ல ல ல ல ல லலாலா

1 கருத்து:

ஸ்ரீஸ்ரீ சொன்னது…

இதே மெட்டில் உள்ள இன்னோரு பாடல் எது?

கருத்துரையிடுக